
புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக, பயணம் செய்த கவச வாகனமாம்??

விடுதலைப் புலிகள், வெறும் துப்பாக்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு யுத்தம் புரியவில்லை. அவர்கள் வைத்திருந்த சில ஆயுதங்கள், சம்பிரதாய ராணுவம், ஒரு யுத்தத்தின் பயன்படுத்தக் கூடியவை என்பதை, இலங்கை ராணுவ அதிகாரிகளே வியப்புடன் தெரிவித்தார்கள்.
முன்பு புலிகள் ரகசியம் காத்த பல ஆயுத விபரங்கள், யுத்தம் முடிந்தபின் இலங்கை ராணுவத்துக்கு தெரிய வந்தது. புலிகள் உபயோகித்த கவச வாகனங்கள், மற்றும் டாங்கிகளும் அவற்றில் அடக்கம்.
புலிகள் பயன்படுத்திய கனரக வாகனங்கள் பல, யுத்தத்தின் பின் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. அவற்றின் போட்டோக்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில போட்டோக்களை தந்திருக்கிறோம்.
புலிகள் பயன்படுத்திய அதி கவச வாகனங்கள் ஆச்சரியப்பட வைப்பவை. பிரபாகரனும், வேறு முக்கியஸ்தர்களும் பாதுகாப்பாக பயணிக்க உபயோகித்த கவச வாகனங்களும், உள்ளன. இவற்றில் பயணிக்கும்போது குண்டு வெடிப்புகள், மற்றும் ராக்கெட் ஷெல் தாக்குதல்கள் பட்டாலும், உள்ளேயிருப்பவர்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன்றவர்கள், உலோக கவச பாதுகாப்பு கொண்ட armour-plated லிமொ சீன் கார்களை உபயோகிக்கிறார்கள். (அயர்லாந்துக்கு ஒபாமா சென்றபோது, அவருடைய கவச பாதுகாப்பு கார் ஒன்று வீதியில் பிரேக்-டவுனாகி, தலைகுனிய வைத்தது)
அது தவிர, தற்போதெல்லாம் தனியார்களுக்கும் (பெரும்பாலும் நடிகர்கள் போன்ற பிரபலங்கள்) கவச வாகனங்களை சில மேலைநாட்டு நிறுவனங்கள் தயாரித்துக் கொடுக்கின்றன.
புலிகள் பயன்படுத்திய கவச வாகனங்களில் டிரைவர் அமரும் பகுதி, பிரபாகரன் போன்ற முக்கியஸ்தர்கள் அமரும் பகுதி ஆகியவற்றின் போட்டோக்களும் இந்த இணைப்பில் உள்ளன. இந்த கவசவாகனம் கைப்பற்றப்பட்ட போது ராணுவம் எடுத்த போட்டோ அது. அதற்குள் இருந்த புலிகளின் சீருடை, யாருடையதோ தெரியவில்லைஸ



