டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் சைவ விழா
07 Oct,2013
டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் சைவ விழா
கடந்த 05-10-2013 சனிக்கிழமை மாலை நாலுமணிக்கு பரடேஸ்சியா அலேபாடசாலை மண்டபத்தில் சைவத்தமிழ்பண்பாட்டுப்பேரவையின் 2013ம் ஆண்டு திருமறை ஓதும் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வரவேற்புத் தீபத்தை திரு..திருமதி செல்வக்கதிரமலை தம்பதியர் ஏற்றிவைக்க மங்கள தீபத்தை திருவாளர்கள் ம.கணேசசர்மா குருக்களும், திரு சிவசேகரக் குருக்களும் அவர்பத்திரனும் ஏற்றிவைத்தனர்.
நந்திக்கொடியை சைவத்தமிழ் பண்பாட்டப்பேரவையின் ஸ்தாபகரும் இன்றைய உபதலைவருமான திரு பொன்னண்ணா அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து செல்வி மகிந்தா பகீரதன் அவர்கள் திருமுறை ஓதினார்.
ஒரு நிமிட மௌனாஞ்சலியுடன் விழா ஆரம்பமானது வரவேற்புரையை, பேரவையின் தலைவர் பேரி சொக்கலிங்கம் செய்தார்.
சிறப்புரையை, ஜெர்மனி நரத்தனாலையா அதிபர் திருமதி வானதி தேசிங்கராசா வழங்க றீய தமிழ்பாடசாலை மாணவர்கள் வழங்கி காவடி நடனத்துடன் விழா ஆரம்பமானது.
தொடர்த விழாவில் ஜெர்மனி நர்தனா ஆல மாணர்களின் சிறப்பான நடனத்தோடு தொடர்த விழாவில் கிறின்ரட் பேரின்பம் ஜெயகுமார் குழுவினரின் அருணகிரிநாதர் என்று கானமும் காட்சியும் மக்களின் பேராதரவை பெற்றது.
தொடர்த விழாவில் பரடேசியா சைவப்பாடசாலை மாணவர்களின் நாடகமும். சுவிஸ்சில் இருந்து வருகை தந்த பிதம வீருந்தினர் பேரவையின் முன்னாள் செயலாளர் திருவாளர் திருநாவுக்கரசு சிறிதரனின் அவர்களின் கடவுளும் நம்பிக்கையும் என்ற பேச்சு ஆரம்பமானது.
சங்கீத ஆசிரியர் இசைமாமணி திருமதி தர்மாவதிஅவர்களின் மாணவர்களின் பஜனனோற்சவ நிகழ்சியும்
பரடேசியா சைவ பாடசாலை மணவர்களின் கோலாட்டம் கும்மி நடனங்களும் நடைபெற்று பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஞாபகார்த்த பசிசும் அடுத்து நான்கு பிரிவின் மூன்று பேருக்கு மூதலாவது பரிசு தங்கப்பதக்கமும் இரண்டாம் மூன்றாம் பரசுகளும் வழங்கப்பட்டது.
சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் பேரவையின் பொருளாளர் திரு செல்லத்துரை சோதிராஜா அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நடைபெற்றது
.
tks.s.durai