வில்லியம் அன்ட் பேமிலிக்காக சாகும் முன்பு டேப்பில் பேசி வைத்த இளவரசி டயானா!
29 Sep,2013

வில்லியம் அன்ட் பேமிலிக்காக சாகும் முன்பு டேப்பில் பேசி வைத்த இளவரசி டயானா!
இங்கிலாந்து இளவரசி டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து தனது மகன் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.
ஆனால் அது விபத்து அல்ல ராஜ குடும்பத்தினரின் சதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்து தனது மூத்த மகன் வில்லியம் மற்றும் அவரின் வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.
மரண பயம்
அந்த டேப்பில் பதிவானவற்றை கேட்டால் டயானா மரண பயத்தில் இருந்தது தெரிய வருகிறது. அவர் தனது வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட சில எதிரிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்திருக்கிறார்.
பேரக் குழந்தைகள்
உங்களின் குழந்தைகளை எனக்காகவும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை நான் மிகவும் நேசிப்பேன், பார்த்துக் கொண்டே இருப்பேன் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள் என்று டயானா அந்த டேப்பில் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்காக பேசியுள்ளார்.
‘கேட்’டை பார்க்காமலே
டயானா இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன்னை பார்த்ததே இல்லை. வில்லியமின் மனைவி அழகாகவும், அறிவாளியாகவும், யாரையும் சார்ந்திராதவராகவும் இருப்பார் என்று டயானா டேப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்பெஷலானவர்
டயானா வில்லியமின் வருங்கால மனைவிக்காக பேசியது: நான் உன்னை கொண்டாடுவேன், நாம் வெகு விரைவில் தோழிகளாவோம் என்று எனக்கு தெரியும். நீ நிச்சயமாக ஸ்பெஷல் ஆனவளாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என் வில்லியமின் மனைவியாக முடியாது.
பெற்றோரின் அறிவுரை
ஒரு வேளை டயானா தனது மகன்களை வழிநடத்த உயிரோடு இல்லை என்றால் என்ன செய்வது என்று அவரது பெற்றோர் தான் இந்த டேப் அறிவுரையை வழங்கியுள்ளனர்.