
டென்மார்க்கில் ஒரு சாமி !
இன்று டென்மார்க்கில் – பிறாண்டா அம்மன் இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி ‘நான் உன்னிடம் வருவேன்’ என்றும் ‘என்னை ஆதரிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.
பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார்.
அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.
அருள்மிகு லலிதாம்பிகை அம்மன், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அகதியாகி டென்மார்க் வளநாட்டிற்கு தப்பி வந்திருக்கிறார். அம்மாவையே அகதியாக ஓட வைத்திருக்கிறார்கள் சிங்கள இனவெறியர்கள்.
தேசிக்காய்: (அதன் மகிமை): பச்சைத் தேசிக்காய் ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் திருக்கரத்தால் வாங்குங்கள். அம்பாளின் தேசிக்காய் உங்கள் பிணி, பீடைகளை நீக்கும். உங்கள் உடலில் எங்கெங்கு நோய் வலிகள் வருத்தங்கள் இருக்கின்றதோ.., அந்த இடங்களில் வைத்து மெதுவாக பிடித்து உருட்டும்போது.., சுகமடையும். எங்கு செல்வதானாலும், ஏதாவது நல்ல காரியங்களைச் செய்யப் போவதானாலும் அம்பாளின் தேசிக்காயுடன் போங்கள்.
எதுவித தடங்கலும் இல்லாது தீயசக்திகளில் இருந்து உங்களை காப்பாற்றி நல்வழியில் கொண்டு செல்லும். அத்துடன் தெய்வத்தாயின் தேசிக்காயை வீட்டுவாசலில் உள்ப் பக்கமாக மேலே வலது பக்கத்தில் கட்டவும். கட்டினால் உங்கள் வீட்டிற்கும் வீட்டில் இருப்போருக்கும் காவலாக இருக்கும்.
டென்மார்க்கில் ஒரு தேசிக்காய், அம்மாவின் ஆலயத்தில் முப்பது குரோனர்கள். ஆனால் தீராத நோய் எல்லாம் தீரும்
1. ஒரு நாள் திடீரென அம்மா நாக தெய்வத்தைப் போல நிலத்தில் விழுந்து உருண்டு வளைத்து தன் உடம்பை வருத்தினார். அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் அம்மாவின் அருகே நின்று அரோகரா சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் வாயிலிருந்து உதிரம் கொட்ட இரண்டு மாணிக்கக் கற்களை அம்மா உமிழ்ந்து எடுத்தார்.
2 .பங்குனி உத்தரத் திருநாளில் வேப்பம் பீடம் ஒன்றை வைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நாக பாம்பொன்றில் மாணிக்கக் கற்களை பதித்து மூலஸ்தானத்தின் வலப்பக்கத்தில் அமர்த்தி அபிஷேகங்கள் நடத்தினார் ஆன்மீகத் தாய் அபிராமி அம்மா.
3. தீர்த்தத் திருவிழா நடைபெற்றது. அப்போது முருகப் பெருமானுடைய வலதுபுற கண் திறந்து மக்களுக்கு அருள் பாலித்தது.(www.Denmarktamil.com-29.07.2013)
4. மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையார் 1998 ஆண்டு முதல் 2006 வரை ஒவ்வோர் மார்கழி மாத 31ம் திகதியில் தனது பூர்வ ஜென்மத் தொடர்புகளைக் களைந்து பார்வதி, காளி, துர்க்கை, கருமாரி, கண்ணகை, நாகம்பாள், முத்துமாரி, மீனாட்சி, விஷாலாட்சி போன்ற அவதாரங்களை எடுத்து பக்தர்களின் பாவங்கள், கருமவினைகள், பிணிகள், நோய்கள், துன்பங்கள் போன்றவைகளைக் களைந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.
தொடர்புகளுக்கு: Sree Abirami Amman Tempke, Norre Askaebevej 24, DK-7330 pande
டென்மார்க்: Phone: 0045 97180192, Mobile: 0045 40413431, Fax: 0045 97184192
சுவிஸ்: Phone: 0041 313310463
வங்கி: Nordea Bank, S . W . I .F . T . N D E A D K K K, DK No.: 2420 0008 0161 4361, Account No.: 9559 080 1614 361