42- 83 வயது தாத்தாவுக்கு டும்டும்
23 Sep,2013
நியூயார்க்: அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் (83). ( George Soros)அமெரிக்காவை சேர்ந்த 42 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். சோரோஸ் பெரும் கோடீஸ்வரர் மட்டுமின்றி இரக்ககுணம், தொண்டுள்ளம் படைத்தவர். இவர் கலிபோர்னியாவை சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஹெல்த் கேர் கன்சல்டன்ட் ட மிகோ போல்டோனை (42) கடந்த 21ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் நியூயார்க் நகரில் விமரிசையாக நடந்தது. அமெரிக்கவாழ் ஹங்கேரியரான சோரோசுக்கு இது 3வது திருமணம். போல்டோனுக்கு 2வது திருமணம்.
(ஜார்ஜ் சோரோஸ் (83) இன் இரண்டு மனைவிகள் வலது புறத்தில்.. )
சோரோஸ் கடந்த 1983ம் ஆண்டு அன்னலீஸ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் சூசன் என்பவரை திருமணம் செய்தார். இவர் மூலம் 2 குழந்தைகள் பிறந்தன. பின்னர் சூசனையும் 2005ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்நிலையில் 3வது முறையாக போல்டோனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் உலக வங்கி தலைவர் ஜிம் யாங்கிம், எஸ்டோனியா அதிபர் எலன் ஜான்சன், லைபீரிய அதிபர் எடிரம்மா, அல்பேனிய அதிபர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். ஏஞ்சலினா ஜூலி, ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு திருமண உடையை வடிவமைத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரீம் அக்ரா போல்டோனின் திருமண உடையை வடிவமைத்திருந்தார்.