என் இதயமே
21 Sep,2013
என் இதயமே
எனக்குள் வாழும்
என் இதயமே
என்னை நினைத்துப்பார்
இரவு பகல் இன்றி
உன்னை சுவாசிக்கின்றேன்
உனக்கொரு துன்பம் என்றால்
நான் அழுகிறேன்
உன் துடிப்புக் குறைந்தால்
நான் வேதனைப் படுகிறேன்
ஆனால் என்னைப் பிரியும் போது
மட்டும்- என்னிடம்
பொய்யானது ஏன்?
எங்கே சென்றாய்
மறுபடியும் என்னை காட்டில்
தனியே தவிக்க விட்டு
எங்கே சென்றாய்
என் அருமைத்தோழா.......
உன்னால் மறுபடியும் இழந்தேன்
என் அப்பாவை இன்று.
காதல் வரமாட்டேன் என்கிறதே.....!!!
இதயத்தில் இருக்க
இடம் தந்தேன் -நீயோ
வலியை தர தந்ததாய்
நினைக்கிறாய்.....!!!
வெய்யிலில் நனைந்து
மழையில் உலரும்
காதல் போல் ஆகிவிட்டது
நம் காதல்...!!!
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே.....!!!
துளித்துளியாய் மழைத்துளியாய்
துளித்துளியாய் மழைத்துளியாய்
விழிகளில் இருந்து விடைகாணாத்
தேடலின் விடைகள்
தமிழனின் வாழ்வில்........
துரத்தி துரத்தி விரட்டிடும்
சிங்களம் ...வீதியிலும்
வாழமுடியவில்லை ...முட்கம்பி
வேலியுளும் வாழமுடியவில்லை
எத்தனன எத்தனன அடக்குமுனற
தமிழனுக்கு சிங்களத்தால்
இத்தனையுள்ளும் எமை காத்து
கல்வியில் களம் பல சமைத்திட
பல்கலைகழகம் புகுந்தால்
அங்கு தமிழனே தமிழனை
தூக்கில் இடுகிறான்........
சிங்களத்து கூட்டிலிருந்து
தங்களை பாதுகாக்கும்
எம் பெண்ணினம்....
தம் பெண்மையை
தமிழ் ஆண்மகனிடம்
தமிழ் தந்தையரிடம்
இருந்த பாதுகாக்க..
முடியாது அஞ்சி ஒடுங்கி ஒடுகிறது
ம்ம்ம் ,,,கலியுகமோ இது
தம்மினத்து சகோதரிகளை
மகவுகளை காத்திடும்
காவலர்களே இன்று
கடித்து குதறும்
சிங்களத்து காடையர்களாய்
எப்படி எமக்கு....
விடியல்வரும் எம்மினமே
விடை தேடிதேடி
விதியின் பிடியிலிருந்து
மீளமுடியலையே
விழியின் மடல்களில் இருந்து
விடையாய் யாய் துளிதுளியாய்
துளிகள் கண்ணீர்துளிகள்....!!