இன்பமான துன்பம்
19 Sep,2013
பேசுவதற்கு அதிகமான
வார்த்தைகள் இருந்தும்
பேச முடியாமல் தவிக்கும் ஓரே
இன்பமான துன்பம் காதல்தான்.....
புகைப்படம் எனக்கு வேண்டாம்
உன்
புகைப்படம் எனக்கு வேண்டாம்
அதில் நீ சிரித்தவண்ணம் இருக்கிறாய்
உன்னை நான் சீண்டி நீ கோபப்படும்
அந்த அழகு -நான் பேசியதும்
உன் கண்ணில் வடியும் முத்து துளி
இத்தனை அழகை புகைப்படத்தில்
எப்படி பார்ப்பேன் - இறந்த உடலும்
ஒன்றுதான் ஒரே படத்தை வைத்திருப்பதும்
என்னை பொறுத்தவரை ஒன்றுதான்....!!!
பெரியண்ணே! பெரியண்ணே!
கழுகுப் பெரியண்ணே! – உன்னைக்
கெஞ்சிக் கேட்டுக்கிறேன்!
நீ வானத்தில் வட்டமிடும்போதே
எங்கம்மா பதறிப் போய் சிறகுக்குள்ளே
எங்களை அணைச்சிக்கிறா!
அவ ஏமாந்த சமயத்திலே
புயலெனப் பாய்ந்து என்னைய
தூக்கிட்டு வந்துட்டே!
உயர உயர என்னைத் தூக்கி வந்து
உச்சாணிக் கிளையிலே
வைச்சிக்கிட்டே!
என் வயித்திலே நேராக் கொத்தி
நான் சாப்பிட்டதெல்லாம்
உறிஞ்சி எடுக்காதே!
வலியிலே நான் கதறிடுவேன்!
என் கைகால் மூட்டெல்லாம் கொத்தி
எலும்பை முறித்து நொறுக்காதே!
உன் வலிய கால் நகங்களால்
என் பிஞ்சுச் சிறகினை இறுக்கிப்
பிடிக்காதே!
கத்தி போன்ற உன் கூர் அலகினால் என்
கழுத்தைத் திருகி முதலில் என்னைக்
கொன்று விடு!
மாலை மயங்கும் அந்தி வேளையிலே
என் உடலின் இளம் மாமிசத்தை
இரவு விருந்தாக்கி இன்பமுறு!
வேதனையில்லா என் ஆன்மா
மறைந்திருந்து உன்னைக் காணும்போது
ஆனந்தமாய் உன் விருந்தை ருசித்திடு!
எனக்காய்...!
உலகினை இயக்கும்
ஒரு சக்தி உண்டாம்
கண்ணுக்கு புலப்படாத
இறைவனும் அவன் தானாம்
விண்ணப்பமொன்று வைக்கிறேன்
வஞ்சமின்றி பார்த்துவிடும்
அகிலத்தை ஆட்டுவிக்கும்
அரசே ..............
எனக்காய் ஏதும் வரம் வேண்டாம்
என் தமிழ் மண்ணிற்காய்
மன்றாடுகிறேன் மானத்துடன்
மண்ணில் எம் தமிழ் சொந்தங்கள்
அச்சமின்றி அகமகிழ்ந்து வாழ
அருள் புரியும் அகிலதை ஆழ்பவரே
எனக்காய் ஏதும் கேட்கவில்லை
கேட்கின்றேன் நான்
என் தமிழ் மண்ணிற்காய்
இரத்த களரி இனியும் வேண்டாம்
இனிதே வாழ இறங்கி வந்து
வரம் தாரும் என்று
இறைவா இறைஞ்சுகின்றேன்
உம்மிடம் எனக்காய் அல்ல
என்றும் எம் தமிழினதிற்காய்...!
பகட்டாக இருக்கிறாள்...!
பட்டுப்புடைவையில்
பகட்டாக இருக்கிறாள்
பகிடிகள் விட்டால்
பார்வையால் அறைகிறாள்
பருவம் அடையாத போது
பார்வைகள் ஏனோ உன்
பக்கம் போவதில்லை
இப்போது நீ போகும் போதும்
வரும்போதும்
பார்க்கிறேன் நீயோ
பார்ப்பதில்லை
ஆனால் உன் தோழியிடம்
மட்டும் என்னைப்பற்றி
புகழ்ந்துரைக்கின்றாய்
உனக்கும் பயிர்ப்புகள்
இருக்கும் தானே