ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்
வீடியோ இணைப்பு
18 Sep,2013
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்
இத்தாலி நாட்டு தீவில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கடலில் மூழ்கிய, "கோஸ்டா கான்கார்டியா' கப்பல் நேற்று, மீட்கப்பட்டது. இத்தாலி நாட்டின் சொகுசு கப்பலான, "கோஸ்டா கான்கார்டியா' கடந்த ஆண்டு, ஜனவரி 13ம் தேதி, ஜிக்லியோ தீவுக்கருகில், பாறைகளில் மோதி, ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
இந்தக் கப்பல், 950 அடி நீளமுள்ளது. விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில், 32 பேர் உயிரிழந்தனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இக்கப்பல், கடலில் சாய்ந்த நிலையிலேயே இருந்தது.
ஏறக்குறைய, 1,15 லட்சம் டன், எடையுள்ள, இந்தக் கப்பலை மீட்கும் பணிக்காக, 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஏராளமான கிரேன்கள் உதவியுடன், துறைமுக மேடைக்கு, கப்பலை இழுக்கும் பணி நடந்தது. இந்த மீட்புப் பணி, 19 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு முடிந்தது. "கப்பலை மீட்கும் பணி முடிவடைந்துவிட்டது. கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கப்பட்ட பின், விரைவில் இந்த தீவிலிருந்து இக்கப்பல் வெளியேற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.