நிர்வாணமாக தியானம் : சீனாவில் மாணவர் கைது
18 Sep,2013
நிர்வாணமாக தியானம் : சீனாவில் மாணவர் கைது
சீனாவில், நிர்வாண நிலையில், சாலையில் அமர்ந்து, தியானத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவரை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, ரஷ்ய மாணவர் ஒருவர், மக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலையில், திடீரென அமர்ந்து, தியானத்தில் ஈடுபட்டார். சற்று நேரத்தில், தன் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றிய அவர், நிர்வாணக் கோலம் பூண்டார். இதனால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகப்படியான மக்கள் இதை வேடிக்கை பார்க்க ஒன்று கூடியதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிர்வாண நிலையில் தியானம் செய்துகொண்டிருந்த மாணவரை, சிலர், தங்கள் மொபைல் மற்றும் கேமராக்களில் படம் பிடித்தனர்.
இரைச்சல் அதிகம் ஆனதால், தியானம் கலைந்து கண் விழித்த மாணவர், பொதுமக்களை அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினார். தன்னை படம் எடுத்தவர்களை, தாக்க முற்பட்டார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், கூட்டத்தை கலைத்து, மாணவரை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
எனினும், மாணவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.வேறு வழியின்றி, அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.