எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி : இருவர் கைது
27 Nov,2010
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக, இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, பூமாம்பாக்கம் கிராமத்துக்கு அருகேயுள்ள பாலத்தின் அடியில், ரயில்வே லைனில் சிலிப்பர் சிமென்ட் கட்டையை வைத்து, கடந்த 24ம் தேதி, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால், சதி முறியடிக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து, விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த இளையராஜா (28), பிரகாஷ் என்கிற கலைமணி (29) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்