மோகினித் தீவு.5/6

18 Jun,2011
 

பெண்ணரசி.5

 


ஒரு நாள், கோவிந்தன் வேடம் பூண்டு வந்த ராஜகுமாரி மதிவாணனிடம் பேசி விட்டு வெளிவந்த போது, ஒற்றர் தலைவன் பார்த்து விட்டான். "நீ யார்? எங்கே வந்தாய்?" என்று கேட்டான். சந்தேகம் கொண்டு தலைப்பாகையை இழுத்து விட்டான். உடனே புவனமோகினி ரௌத்ராகாரம் அடைந்து, ஒற்றர் தலைவனைக் கண்டித்துத் திட்டினாள். அவன் நடுநடுங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிறகு போய் விட்டான். இதெல்லாம் அரைகுறையாக உள்ளே தன் வேலைக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மதிவாணன் காதில் விழுந்தது! கோவிந்தனுடைய அதிகார தோரணையான பேச்சும் குரலும் அவனுக்கு வியப்பையும் ஓரளவு திகைப்பையும் உண்டாக்கின. கோவிந்தனைப் பற்றி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று ஐயம் அவன் மனத்தில் உண்டாயிற்று.

இது நிகழ்ந்த சில நாளைக்கெல்லாம் பராக்கிரம பாண்டியரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு திருவிழா நடந்தது. அன்றைக்குப் பாண்டியரும் அவருடைய குமாரியும் ரதத்தில் அமர்ந்து ஊர்வலம் போனார்கள். அப்போது மதிவாணன் சிற்பக் கூடத்தின் மேல் மாடத்தில் நின்று ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சோழ ராஜகுமாரனுடைய மனம் அப்போது பெரிதும் கலக்கத்தை அடைந்திருந்தது. அவன் மதுரைக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் வந்த காரியம் நிறைவேறுவதற்கு வழி எதையும் அவன் காணவில்லை. உத்தமசோழரை வைத்திருந்த சிறைக்குக் கட்டுக்காவல் வெகு பலமாயிருந்ததை அவன் தெரிந்து கொண்டிருந்தான். எத்தனை எத்தனையோ யுக்திகளை அவன் உள்ளம் கற்பனை செய்தது. ஆனால், ஒன்றிலும் காரியசித்தி அடையலாம் என்ற நிச்சயம் ஏற்படவில்லை. நாளாக ஆக, பராக்கிரம பாண்டியன் மீது அவனுடைய குரோதம் அதிகமாகி வந்தது. வேறு வழி ஒன்றும் தோன்றாவிட்டால், பழிக்குப் பழியாகப் பராக்கிரம பாண்டியர் மீது வேல் எறிந்து அவரைக் கொன்று விட வேண்டுமென்று எண்ணினான்.

இத்தகைய மனோ நிலையில், அவன் சிற்பக் கூடத்தின் மேன் மாடத்திலிருந்து பாண்டிய மன்னரின் நகர்வலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். பராக்கிரம பாண்டியர் வீற்றிருந்த அலங்கார வெள்ளி ரதம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரதத்தில் பாண்டியருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை கவனித்தான். பாண்டியரின் பட்டமகிஷி காலமாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அரசர் பக்கத்தில் உட்கார்ந்து வருவது அவருடைய மகளாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த இன்னல்களுக்கெல்லாம் காரணமான அந்தப் பெண் எப்படித்தான் இருப்பாள் என்று தெரிந்து கொள்ள, அவனை மீறிய ஆவல் உண்டாயிற்று. ஆகையால் நின்ற இடத்திலிருந்து அகலாமல், நெருங்கி வந்த ரதத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

சிற்பக் கூடத்துக்கு நேராக ரதம் வந்ததும், பாண்டிய குமாரி சிற்பக்கூடத்தின் மேல்மாடத்தை நோக்கினாள். தேவேந்திரச் சிற்பியின் பல சீடர்களுக்கு மத்தியில் நின்ற மதிவாணனுடைய முகத்தை அவளுடைய கண்கள் தேடிப்பிடித்து அங்கேயே ஒரு கண நேரம் நின்றன; அந்தக் கணத்தில் மதிவாணன் தன் மனத்தைச் சில காலமாகக் கலக்கி வந்த இரகசியத்தைக் கண்டு கொண்டான். எவ்வளவு திறமையாக எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், கண்கள் உண்மையை வெளியிடாமல் தடுக்க முடியாது. தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகன் என்று சொல்லிக் கொண்டு வந்து தன்னோடு சிநேகம் பூண்ட வாலிபன், உண்மையில் மாறுவேடம் தரித்த பாண்டிய குமாரி புவனமோகினிதான் என்று தெரிந்துவிட்டது.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதும் சுகுமாரனுடைய உள்ளம் கொந்தளித்தது. பற்பல மாறுபட்ட உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தது, தன்னை ஏமாற்றியவளைத் தான் ஏமாற்றி விட வேண்டும் என்பதுதான். அப்படி ஏமாற்றுவதன் மூலம் தான் வந்த காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஓர் உபாயத்தைச் சுகுமாரன் தேடிக் கடைசியில் கண்டு பிடித்தான். ஆனால், காரியத்தில் அதை நிறைவேற்ற வேண்டி வந்த போது, அவனுக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது..."

கதை இந்த இடத்துக்கு வந்த போது, அந்த ஆடவனின் முகத்தில் உண்மையான பச்சா தாபத்தின் சாயை படர்ந்தது. அவனுடைய குரல் தழதழத்தது பேச்சு தானாகவே நின்றது. அவன் கதையை விட்ட இடத்தில், அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டாள்:-

"பாவம்! அந்த வஞ்சகச் சிற்பியின் கபட எண்ணத்தை அறியாத புவனமோகினி, வழக்கம் போல் மறுநாள் அவனைப் பார்ப்பதற்காக ஆண் வேடத்தில் சென்றாள். அவனைத் தான் ஏமாற்றியதற்காகத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள்.

மதிவாணன் வெகு திறமையுடன் நடித்தான். நேற்றோடு தன்னுடைய விரதத்தைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னான். பாண்டிய குமாரியின் சுண்டு விரல் ஆக்ஞைக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யச் சித்தமாயிருப்பதாகக் கூறினான். இனிமேல் ஆண்வேடம் பூண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றும், ராஜகுமாரியாகவே தன்னைப் பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தான். கள்ளங்கபடமற்ற புவனமோகினி, அவனுடைய வஞ்சக வார்த்தைகளையெல்லாம் உண்மையென்று நம்பினாள். இந்நாளில், மேற்கே குடகு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற பாண்டிய சேனை பெருந்தோல்வியடைந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பராக்கிரம பாண்டியர், "தோல்வியை வெற்றியாகச் செய்து கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, உதவிப் படையுடன் புறப்பட்டுப் போனார். போகும்போது, அவர் தம் அருமை மகளிடம் தம்முடைய முத்திரை மோதிரத்தை ஒப்படைத்து, "நான் இல்லாத காலத்தில் இராஜ்யத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது" என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தன்னுடைய உள்ளத்தையே பாதுகாக்க முடியாமால் நாடோ டி வாலிபன் ஒருவனுக்குப் பறிகொடுத்துவிட்ட புவன மோகினி இராஜ்யத்தை எப்படிப் பாதுகாப்பாள்? அவள் மனோநிலையை அறிந்த இளஞ்சிற்பி, தன் வஞ்சக வலையைத் தந்திரமாக வீசினான்.

ஒருநாள் புவனமோகினி தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்குப் போன போது மதிவாணன் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவனுக்கு எதிரே ஒரு செப்பு விக்கிரகம் உடைந்து சுக்கு நூறாகக் கிடந்தது. அவனுடைய சோகத்துக்குக் காரணம் என்னவென்று பாண்டியகுமாரி கேட்டாள். நொறுங்கிக் கிடந்த விக்கிரகத்தை இளஞ்சிற்பி காட்டி, "செப்புச் சிலை வார்க்கும் வித்தை இன்னும் எனக்குக் கைவரவில்லை. என் ஆசிரியருக்கும் அது தெரியவில்லை. இந்த உயிர் வாழ்க்கையினால் என்ன பயன்? ஒரு நாள் பிராணனை விட்டு விடப் போகிறேன்" என்றான். பாண்டிய குமாரியின் இளகிய நெஞ்சு மேலும் உருகியது. "அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதற்கு வழி ஒன்றும் இல்லையா?" என்று கேட்டாள். "ஒரு வழி இருக்கிறது. ஆனால், அது கைகூடுவது துர்லபம்" என்றான் மதிவாணன். மேலும் குடைந்து கேட்டதில், அவன் தன் அந்தரங்கத்தை வெளியிட்டான். "செப்புச் சிலை வார்க்கும் வித்தையை நன்கு அறிந்தவர் ஒரே ஒருவர் இருக்கிறார். அவர் இந்த நகரத்தில் கட்டுக் காவலுடன் கூடிய கடுஞ்சிறையில் இருக்கிறார். உத்தம சோழரை ஒரு நாள் இரவு தனியாகச் சிறையில் பார்க்க முடியுமானால் போதும். அவரிடம் அந்த வித்தையின் இரகசியத்தை அறிந்து கொண்டு விடுவேன். உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் இந்த நகருக்கு வந்ததே இந்த நோக்கத்துடனே தான். ஏதாவது ஓர் உபாயம் செய்து உத்தம சோழரைச் சிறையில் சந்தித்து அவரிடமுள்ள இரகசியத்தை அறிந்து போகலாம் என்று தான் வந்தேன். ஆனால், கை கூடுவதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நான் இந்த உலகில் உயிர் வாழ்ந்து என்ன பயன்?" என்றான். இதையெல்லாம் உண்மையென்று நம்பிய புவனமோகினி, "நீ கவலைப்பட வேண்டாம். உன்னுடைய மனோரதம் ஈடேற நான் ஏற்பாடு செய்கிறேன்," என்றாள். அதை நம்பாதது போல் மதிவாணன் நடித்தான். முடிவில் "அவ்விதம் நீ உதவி செய்தால் என் உயிரையே கொடுத்தவளாவாய். நான் என்றென்றைக்கும் உன் அடிமையாயிருப்பேன்" என்றான்.

மறுநாள் புவனமோகினி மதிவாணனிடம் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். "இன்றிரவு இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு சிறைக்கூடத்துக்குப் போ! இதைக் காட்டினால் திறவாத சிறைக் கதவுகள் எல்லாம் திறந்து கொள்ளும். அசையாத காவலர்கள் எல்லாரும் வணங்கி ஒதுங்கி நிற்பார்கள். உத்தம சோழரைச் சந்தித்து இரகசியத்தை தெரிந்து கொள். நாளைக்கு முத்திரை மோதிரத்தை என்னிடம் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்து விடு!" என்றாள்.

மதிவாணன், முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டு, மறுபடியும் நன்றி கூறினான். பாண்டிய குமாரிக்குத் தான் ஏழேழு ஜன்மங்களிலும் கடமைப்பட்டிருப்பேன் என்று சொன்னான். அவளுக்குத் தன்னுடைய இருதயத்தையே காணிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டதாகவும், இனி என்றென்றைக்கும் அவள் காலால் இட்ட பணியைத் தன் தலையினால் ஏற்றுச் செய்யப் போவதாகவும் கூறினான். அதையெல்லாம், அந்தப் பேதைப் பெண் புவனமோகினி உண்மையென்றே நம்பினாள்...

 

சுகுமாரன்.6

 மோகினித் தீவின் சுந்தர புருஷன் கூறினான்: "இளம் சிற்பியைக் குறித்துப் பாண்டிய குமாரி கொண்ட எண்ணத்தில் தவறு ஒன்றுமில்லை. சுகுமாரன் தன் இதயத்தை உண்மையில் அவளுக்குப் பறிகொடுத்து விட்டான். அவளை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என்னும் எண்ணம், அவனுக்கு அளவில்லாத வேதனையை அளித்தது. ஆயினும், தந்தையை விடுதலை செய்ய வேண்டிய கடமையை அவன் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமான கடமையாகக் கருதினான். பாண்டிய குமாரியிடம் தான் கொண்ட காதல் பூர்த்தியாக வேண்டுமானால், அதற்கும் உத்தம சோழரை விடுவிப்பது ஒன்றுதான் வழி. இவ்விதம் எண்ணிச் சுகுமாரன் புவனமோகினி தன்னிடம் நம்பிக்கை வைத்துக் கொடுத்த மோதிரத்தைத் தான் வந்த காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான். ஆயினும் அதற்கு இன்னும் பல தடங்கல்களும் அபாயங்களும் இருக்கத்தான் இருந்தன. ஒற்றர் தலைவன் தினகரன் அந்தச் சிற்ப மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது எல்லாவற்றிலும் பெரிய இடையூறு. அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று அவன் சிந்தித்து, கடைசியில் அந்த இடையூறையும் தன்னுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள, ஓர் உபாயம் கண்டு பிடித்தான்.

அன்று சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்ததும், சுகுமாரன் சிற்பக் கூடத்திலிருந்து வெளியேறினான். சற்றுத் தூரத்தில் வேறு எதையோ கவனிப்பவன் போல நின்று கொண்டிருந்த தினகரனை அணுகி "ஐயா! இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டான். தினகரனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவனுடைய புருவங்கள் மேலேறி நின்றதையும் கவனித்தும் கவனியாதவன் போல், "என்ன ஐயா! நான் சொல்வது காதில் விழவில்லையா? இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போக வேண்டும்?" என்றான். அதற்குள் தினகரன் நிதானமடைந்து விட்டான். "இந்த ஊரில் பன்னிரண்டு சிறைக்கூடங்கள் இருக்கின்றன. நீ எதைக் கேட்கிறாய் அப்பா?" என்றான். "உத்தம சோழரை வைத்திருக்கும் சிறையைக் கேட்கிறேன்," என்று சுகுமாரன் சொன்ன போது, மறுபடியும் தினகரனுடைய முகம் ஆச்சரியம் கலந்த உவகையைக் காட்டியது. "உத்தம சோழரை அடைத்திருக்கும் சிறை திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது. ஆனால், நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ இந்த ஊரான் இல்லை போலிருக்கிறதே!" என்றான். "ஆமாம்; நான் இந்த ஊர்க்காரன் இல்லை. தஞ்சாவூரிலிருந்து வந்தவன். இன்று ராத்திரி, நான் உத்தமசோழரை அவசியம் பார்த்தாக வேண்டும். ஆனால் அவர் இருக்கும் சிறை எனக்குத் தெரியாது. உனக்கு முக்கியமான வேலை ஒன்றும் இல்லை போலிருக்கிறதே! கொஞ்சம் எனக்கு வழிகாட்ட முடியுமா?" என்றான்.

தினகரன் மேலும் திகைப்புடன், "வழி காட்ட முடியும் அப்பா! அதைப்பற்றிக் கஷ்டம் ஒன்றும் இல்லை; ஆனால் நீ என்ன உளறுகிறாய்? கடும் சிறையில் இருக்கும் உத்தம சோழரை நீ எப்படிப் பார்க்க முடியும்?" என்றான். "அதற்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால் சிறைக் கதவு உடனே திறந்து விடும். உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நீயும் என்னோடு வந்து பார். எனக்கு வழி காட்டியதாகவும் இருக்கும்," என்றான் சுகுமாரன். ஒற்றர் தலைவன் தன்னுடைய திகைப்பையும் வியப்பையும் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு, "நான் வழி காட்டுவது இருக்கட்டும். உத்தம சோழரை நீ எதற்காகப் பார்க்கப் போகிறாய்? அவரிடம் உனக்கு என்ன வேலை? நீ யார்?" என்றான். "நானா? தேவேந்திரச் சிற்பியாரின் மாணாக்கன். செப்புச் சிலை வார்க்கும் வித்தையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன். பாண்டிய குமாரி பெரிய மனது செய்து முத்திரை மோதிரத்தை என் வசம் கொடுத்திருக்கிறாள். நாளைக்கு அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். ஆகையால் இன்று ராத்திரியே உத்தம சோழரை நான் பார்த்தாக வேண்டும். உனக்கு வர இஷ்டமில்லை என்றால், வேறு யாரையாவது அழைத்துக் கொண்டு போகிறேன்" என்றான் சுகுமாரன்.

இதையெல்லாம் பற்றி என்ன நினைக்கிறது என்று தினகரனுக்குத் தெரியவில்லை. இதில் ஏதோ கபட நாடகம் இருக்கிறது என்பது மட்டும் அவன் மனதிற்குத் தெரிந்தது. எப்படியிருந்தாலும் இந்தப் பையனைத் தனியாக விடக்கூடாது; தானும் பின்னோடு போவது நல்லது என்று தீர்மானித்தான். "இல்லை அப்பனே! நானே வருகிறேன். எனக்கு அந்தச் சிறைச்சாலையின் காவலர்கள் சிலரைக் கூடத் தெரியும்!" என்றான். "வந்தனம். இங்கிருந்து நீ சொல்லும் சிறைக்கூடம் எத்தனை தூரம் இருக்கும்?" என்று சோழகுமாரன் கேட்டான். இதையெல்லாம் பற்றி என்ன நினைக்கிறது என்று தினகரனுக்குத் தெரியவில்லை. இதில் ஏதோ கபட நாடகம் இருக்கிறது என்பது மட்டும் அவன் மனதிற்குத் தெரிந்தது. எப்படியிருந்தாலும் இந்தப் பையனைத் தனியாக விடக்கூடாது; தானும் பின்னோடு போவது நல்லது என்று தீர்மானித்தான். "இல்லை அப்பனே! நானே வருகிறேன். எனக்கு அந்தச் சிறைச்சாலையின் காவலர்கள் சிலரைக் கூடத் தெரியும்!" என்றான். "வந்தனம். இங்கிருந்து நீ சொல்லும் சிறைக்கூடம் எத்தனை தூரம் இருக்கும்?" என்று சோழகுமாரன் கேட்டான்.

"அரைக் காதம் இருக்கும்" என்று தினகரன் கூறியதும், "அவ்வளவு தூரமா? நடந்து போய் வருவது என்றால் வெகு நேரம் ஆகிவிடுமே? நான் இரவில் சீக்கிரமாய்த் தூங்குகிறவன். குதிரை ஒன்று கிடைத்தால், சீக்கிரமாய்ப் போய் வரலாம்," என்றான் சுகுமாரன். "குதிரைக்கு என்ன பிரமாதம்? ஒன்றுக்கு இரண்டாக வாங்கித் தருகிறேன். இரண்டு பேருமே போய்விட்டு வரலாம். எனக்குக் கூட உத்தமசோழரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஆமாம், அவர் ராஜ ராஜ சோழரின் நேரான வம்சத்தில் பிறந்தவராமே? அது உண்மைதானா?" என்று தினகரன் கேட்டான். "அதெல்லாம் எனக்குத் தெரியாது ஐயா! உத்தம சோழர் சிற்பக் கலையில் சிறந்த நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு விக்கிரஹம் வார்க்கும் வித்தை, தற்சமயம் இந்தத் தேசத்திலேயே, அவர் ஒருவருக்குதான் தெரியுமாம். பாண்டிய குமாரி புவனமோகினி சிற்பக் கலையில் ஆசையுள்ளவளாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான். இல்லாவிட்டால் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரம் லேசில் கிடைத்து விடுமா?" என்று சொல்லி, சுகுமாரன் தான் பத்திரமாய் வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் அதைப் பத்திரப்படுத்தினான். ஆனால், அந்த ஒரு வினாடி நேரத்தில், அது உண்மையான அரசாங்க முத்திரை மோதிரம் என்பதைத் தினகரன் பார்த்துக் கொண்டான். அதைப் பலவந்தமாக சுகுமாரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிடலாமா என்று ஒரு கணம் தினகரன் நினைத்தான். ஆனால், அந்த அதிசயமான மர்மத்தை முழுதும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை காரணமாக, அந்த எண்ணத்தை ஒற்றர் தலைவன் கை விட்டான். "சரி வா! போகலாம்!" என்று சொன்னான்.

அரண்மனைக் குதிரை லாயங்களில் ஒன்றுக்குத் தினகரன் இளஞ்சிற்பியை அழைத்துக் கொண்டு போனான். உள்ளே சென்று லாயத் தலைவனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்தான்.

"அடே அப்பா! நீ யார்?" என்றான் சுகுமாரன். தினகரன் ஒரு கணம் யோசித்து "நான் யார் என்றால், இந்த மதுரையில் வசிக்கும் ஒருவன். எனக்குக் கூடச் சிற்பக் கலையில் ஆசை உண்டு. அதனால் தான் உன்னோடு வருகிறேன்," என்றான். "கட்டாயம் வா! அது மட்டுமல்ல. உத்தம சோழரிடம் நான் எதற்காகப் போகிறேனோ அதை மட்டும் தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் சிற்ப வித்தையில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இராது. மதுரையில் ஒரு சிற்பக்கூடம் ஏற்படுத்தலாம் என்றிருக்கிறேன். நீ எனக்கு உதவி செய்ய முடியுமா?" என்றான் சுகுமாரன். "ஆகட்டும் முடிந்ததைச் செய்கிறேன்," என்றான் தினகரன். இருவரும் குதிரைகள் மேல் ஏறித் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் இருந்த பெரிய சிறைச் சாலைக்குச் சென்றார்கள். வழக்கம் போலச் சிறைக் காவலர்கள் அவர்களைத் தடை செய்தார்கள். ஒற்றர் தலைவன் தினகரனைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகைப்பாயிருந்தது. ஏனெனில், தினகரனுக்குப் பாண்டிய ராஜ்யத்தில் மிக்க செல்வாக்கு உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் யாராயிருந்தால் என்ன? அவர்களுடைய கடமையைச் செய்தேயாக வேண்டுமல்லவா? தடுத்த காவலர்களிடம் சுகுமாரன் முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், மந்திரத்தைக் காட்டிலும் அதிக சக்தி முத்திரை மோதிரத்துக்கு உண்டு என்று தெரிந்தது. புவனமோகினி சொன்னது போலவே, காவலர்கள் தலை வணங்கினார்கள். கதவுகள் தட்சணமே திறந்து கொண்டன. இருவரும் பல வாசல்கள் வழியாக நுழைந்து, பல காவலர்களைத் தாண்டி, உத்தம சோழரை வைத்திருந்த அறைக்குச் சென்றார்கள். உத்தம சோழரைப் பயங்கரமான தோற்றத்துடன் பார்த்ததும், சுகுமாரனுடைய உள்ளத்தில் அமுங்கியிருந்த கோபம், துக்கம் எல்லாம் பொங்கின. ஆயினும், மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அவருடைய அறைக்குள் நுழைவதற்குள் "நீர் கொஞ்ச நேரம் வெளியிலேயே இருக்கலாமா?" என்று தினகரனைக் கேட்டான். "நன்றாயிருக்கிறது; இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டு, இப்போது வெளியிலேயே நிற்கச் செய்கிறாயே?" என்றான் தினகரன். அவ்விதம் சொல்லிக் கொண்டே சுகுமாரனுடன் உள்ளே நுழைந்தான். அறைக்குள் நுழைந்ததும் சுகுமாரன் கதவைச் சாத்திக் கொண்டான். தினகரன் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைப் பிடித்துக் கட்டி விட்டான். வாயிலும் துணி அடைத்து விட்டான். இதையெல்லாம் பார்த்துத் திகைத்திருந்த உத்தம சோழரை, சுகுமாரன் உடனே விடுதலை செய்தான். அதற்கு உதவியாக அவன் கல்லுளியும் சுத்தியும் கொண்டு வந்திருந்தான். உத்தம சோழரின் இடுப்பில் சங்கிலிகட்டி, அதைச் சுவரில் அடித்திருந்த இரும்பு வளையத்தில், இப்போது சுகுமாரன் தினகரனைப் பிடித்துக் கட்டிவிட்டான். அவன் அணிந்திருந்த உடைகளைக் கழற்றித் தந்தையை அணிந்து கொள்ளச் செய்தான். "எல்லா விபரமும் அப்புறம் சொல்கிறேன். இப்போது என்னோடு வாருங்கள். நான் என்ன பேசினாலும் மறுமொழி சொல்ல வேண்டாம்," என்று தந்தையிடம் கூறினான்.

உடனே தந்தையும் மகனும் சிறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். நல்ல இருட்டாகையால், காவலர்கள் அவர்களைக் கவனிக்கவில்லை. சுகுமாரனும் தினகரனுடன் பேசுவது போல, "உத்தம சோழருக்கு ரொம்ப வயதாகிவிட்டது, பாவம்! எத்தனை காலம் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ என்னமோ?" என்று சொல்லிக் கொண்டே நடந்தான். இருவரும் சிறையை விட்டு வெளியேறினார்கள். சுகுமாரனும் தினகரனும் ஏறி வந்த குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. அவற்றின் மேல் ஏறித் தஞ்சாவூரை நோக்கி குதிரைகளைத் தட்டி விட்டார்கள். வழியில் ஆங்காங்கு அவர்களை நிறுத்தியவர்களுக்கெல்லாம், முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், தடுத்தவர்கள் திகைப்படைந்து, இரண்டு பேருக்கும் வழி விட்டார்கள். குதிரை மீது வாயு வேக மனோ வேகமாகப் போய்க் கொண்டிருந்த போதிலும், சுகுமாரனுடைய உள்ளம் மட்டும் மதுரையிலேயே இருந்தது. தான் செய்து விட்ட மோசத்தைப் பற்றி புவனமோகினி அறியும் போது, எப்படியெல்லாம் நொந்து கொள்வாளோ, அதனால் அவளுக்கு என்ன துன்பம் விளையுமோ என்னமோ என்று எண்ணி மிகவும் வருத்தப் பட்டான்..."

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies