பாடல் பாடும் வித்தியசமான பட்டுப்புடவை..! .
12 Jun,2011
.“ஸ்வரம்மதூரி’ எனும் பெயரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட்டுப் பாடும் பட்டு புடவைகள் தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகின்றன. இதுகுறித்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர்
மாவட்டம், தர்மாவரம் பகுதியை சேர்ந்த உடை வடிவமைப்பாளரான பி.மோகன் என்பவர் கூறுகையில், “பாட்டுப் பாடும் பட்டுப் புடவையில் முந்தானையில், ஐபாட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில், பதியப்பட்டுள்ள 200 பாடல்கள், 4 மணி நேரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். இதற்காக, இந்த வகை பட்டுப்புடவையில், 2 ஜி.பி., மெமரி சிப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்து, இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த சேலையின் உரிமையை பெற்றுள்ள நெசவாளர் பி.தத்தா சிவா கூறியதாவது: தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஷோரூம்களில் இருந்து, இந்த சேலைகளுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு சேலை உருவாக்க, ஒரு மாதம் ஆகிறது. எங்கள் யூனிட்டை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றி, இந்த சேலையை முழுவதுமாக உருவாக்கி உள்ளனர். இதற்கு முன், எல்.இ.டி., கொண்டு “ஒளிரும்’ சேலை உருவாக்கினோம். அதே போன்று, சந்தனக் கட்டை கொண்டும் முன்னர் பட்டுப்புடவை தயாரித்திருந்தோம். அவற்றிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்தன.