ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு;
வாலிபரை கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு
10 Jun,2011
ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு;
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில் நங்கார்கர் மாகாணத்தில் உள்ள டர் பாபா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு திருமணம் நடந்தது. அங்கு துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் புகுந்தனர்.
திருமண விழாவில் பங்கேற்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.அதில் 9 பேர் பலியானார்கள் 5 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை டர் பாபா மாவட்ட அதிகாரியின் செய்தி தொடர்பாளர் ஜியா அப்துல் ஷாய் தெரிவித்துள்ளார்.