பெண்களுக்கு ஆபாச படம்:அமெரிக்க எம்.பி., மன்னிப்பு
07 Jun,2011
பெண்களுக்கு தனது ஆபாசப் படத்தை அனுப்பியதை அமெரிக்க எம்.பி., ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி., அந்தோணி வீனர், 46. இவரது மனைவி ஹுமா அபிதின், வெளியுறவு அமைச்சர் ஹிலாரியிடம் உதவியாளராக பணியாற்றுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், இன்டர்நெட்டில் (டிவிட்டர்) மேலாடை அணியாத ஜட்டி அணிந்த படத்தை ஆறு பெண்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த விஷயம் வெளியே கசிந்தவுடன் அதை மறுத்தார் அந்தோணி. ஆனால், தற்போது இந்த தவறை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் குறிப்பிடுகையில், "ஜட்டி அணிந்த எனது ஆபாசப் படத்தை ஆறு பெண்களுக்கு அனுப்பியது உண்மை தான். அந்த பெண்களிடம் போனில் மட்டுமே பேசியுள்ளேன். நேரில் சந்தித்தது கிடையாது. வேறெந்த விதமான உடல் சேர்க்கையும் அந்த பெண்களிடம் வைத்து கொண்டது கிடையாது. எனது மனைவிக்கு விசுவாசமாக தான் உள்ளேன். நான் செய்ததை தவறு என்று உணர்ந்து கொண்டேன். எனினும் எனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்' என்றார்.பிரபல எம்.பி.யான அந்தோணி, 2013ம் ஆண்டு நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.