கணவன் இறந்தால் சொத்து கிடைக்கும்.. கொலை செய்த மனைவி..!
28 Feb,2026
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிரேநந்திஹள்ளி கிராமத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட கல்மேஷ் கோட்டியின் மரணம், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான கொலை சதியாக அம்பலமாகியுள்ளது.
மகா சிவராத்திரிக்காக ஊருக்கு திரும்பிய கல்மேஷை, அவரது மச்சான் மல்லேஷ் மற்றும் கூட்டாளி மதுக்கப்பா ஆகியோர் மது விருந்துக்கு அழைத்து சென்று கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
போலீஸ் விசாரணையில், கல்மேஷின் மனைவி கஸ்தூரி தன் அண்ணனிடம் வாங்கிய ரூ.8 லட்சம் கடனை அடைக்க, கணவரின் 3 ஏக்கர் நிலத்தை கைப்பற்ற இந்த திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது.
கணவர் இறந்தால் சொத்து தன் பெயருக்கு வரும் என நம்பி, தனது மகன் கிரணின் துணையோடு இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இதய அழுத்தத்தால் இறந்ததாக நாடகமாடிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து ஹிந்தல்கா மத்திய சிறையில் அடைத்தனர்.