இன்றைய ராசி பலன்கள் - நல்ல நேரம் - ஜனவரி- 11- 2026
இன்றைய பஞ்சாங்கம் தேதி 27 - மார்கழி - விசுவாவசு வருடம் ஞாயிறு நாள் ஞாயிறு திதி அஷ்டமி (up to 10:20 am) நவமி (up to January 12, 12:43 pm) நட்சத்திரம் சித்திரை (up to 6:12 pm) ஸ்வாதி (up to January 12,9:05 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:30 - 8:30 am / 3:30 - 4:30 pm கௌரி நல்ல நேரம் 10:45 - 11.45 am / 1:30 - 2:30 am இராகு காலம் மதியம்ா 4.30 - 6.00 எமகண்டம் மதியம் 12.00 - 1.30 குளிகை மதியம் 3.00 - 4.30 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி சூரியோதயம் 6:38 AM சூரிய அஸ்தமனம் 5:55 PM சந்திரோதயம் Jan 11 12:14 AM சந்திர அஸ்தமனம் Jan 11 12:09 PM
மேஷ ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். அரசியல்வாதியின் பழக்கம் நன்மையை தரும். தொழில்துறையில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். வேலை இடத்தில் மரியாதை உண்டாகும். பணி நியமன கடிதம் வந்து சேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நிறைவேறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டம் போட்டு செயல்படுவீர்கள். மனம் உறுதியுடன் காரியம் பார்ப்பீர்கள். வேலை முடியும் வரை விடாமுயற்சியுடன் இருப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எதைப் பற்றியும் கவலைப்படாமல் செலவு செய்வீர்கள். வீட்டில் மன அமைதி குறையும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை. 2. வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரப்படுத்தவும். 3. வேலை இடத்தில் வளவளவென்று பேசுவது தவறு. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! உயர்வான செய்திகள் வந்து சேரும் நாள். மேலதிகாரி பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும். யோக பலன் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நல்ல காரியங்கள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: புதிய முறையில் வியாபாரத்தை பெருக்கும் திட்டம் செம்மையாக செயல்படுத்தப்படும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: மற்றவர்கள் பேச்சை எளிதில் நம்புவீர்கள். உறவினர்களை ஒதுக்க முடியாமல் தவிப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வாகனங்களில் செல்லும்போது அலைபாயும் மனம் ஆபத்து. 2. இரவு நேர பயணங்களில் எச்சரிக்கை தேவை. 3. இணையதள ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! சற்று மந்தமான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகள் உண்டாகும். வருமானத்தில் சுணக்க நிலை ஏற்படும். வெளியூரில் இருந்து வரவேண்டிய செய்தி தாமதமாகும். நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். பூர்வீக சொத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். பண வரவு சற்று குறைவாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன சஞ்சலம் அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன தைரியம் குறையும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளை தாண்டி காரியம் பார்க்கின்ற மன தைரியம். எதையும் எதிர்கொள்கின்ற மன உறுதி. இன்று உங்கள் பலவீனம்: திடீர் செலவு ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை. மனைவியின் அனுசரித்து போகாத குணம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. பண வரவு செலவுகளில் அலட்சியம் கூடாது. 2. பொல்லாங்கு பேசும்சொந்தங்களிடம் கவனம் தேவை. 3. அந்நிய பெண்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! மேன்மையான பலன்கள் தேடி வரும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரித்து பணவரவு கூடும். தொழிலில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். வேலை இடத்தில் பாராட்டும் பெருமையும் கிடைக்கும். கையிருப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களில் மூலம் நன்மை கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்து செய்தி வரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: பிள்ளைகளின் போக்கு மன சஞ்சலத்தை உண்டாக்கும். தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. மனைவியின் பேச்சு காது கொடுத்து கேட்க வேண்டும். 2. தேக ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். 3. தேவையில்லாத வார்த்தைகளை பேசி அவஸ்தைப்பட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! சில எதிர்ப்புகளை சந்திக்கும் நாள் இன்று. வேலை இடத்தில் கடுமையாக உழைப்பை கொடுத்தாலும் அதற்கான பலன் குறைவு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது கடினம். சம்பள விஷயத்தில் மனதிருப்பி இருக்காது. வியாபாரத்தில் மிதமான போக்கை காணப்படும். தொழிலில் புதிய முதலீடுகளை கவனமாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அமைதி குறையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு மந்தமாகும். இன்று உங்கள் பலம்: நெருக்கமான உறவினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் எதிர்ப்புகளை முறியடிக்கும் மன துணிவு. இன்று உங்கள் பலவீனம்: நெருக்கமானவர்களிடம் ஆத்திரத்தோடு பேசி விடுவது. மனதில் உள்ளது அப்படியே கொட்டி விடும் பழக்கம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. பங்குதாரர்களிடம் கவனமாக பேச வேண்டும். 2. வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சுணக்கம் கூடாது. 3. தேக ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! சுபிட்சமான தகவல்கள் கிடைக்கும் நாள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் அளவில் உங்கள் திறமையும் நேர்மையும் வெளிப்படும். அரசாங்க வேலையில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வங்கி இருப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்பியதை அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பண உதவி வந்து சேரும். தொழிலை விரிவு படுத்தும் திட்டம் வெற்றி பெறும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் பொறாமை உங்களை சிரமப்படுத்தும். பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதியை குறைக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வியாபார கணக்குகளை சரிபார்க்க வேண்டும். 2. இணைய மோசடிகளில் சிக்கி விடாதீர்கள். 3. வீட்டில் அனாவசியமாக கோபத்தை காட்டாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! சுப காரியம் காரியங்கள் நடக்கும் நாள். திருமண பேச்சு வார்த்தை கை கூடி வரும் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி பூமி லாபம் உண்டாகும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் கிடைக்கும் . இன்று உங்கள் பலம்: தொழில்நுட்ப உதவியோடு வியாபாரத்தை அணுகுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு பலம் தரும். இன்று உங்கள் பலவீனம்: இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது. நண்பர்களிடம் தேவையில்லாமல் வம்பளப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. மனைவியின் தேவையை பூர்த்தி செய்ய தாமதம் கூடாது. 2. பற்று வரவு கணக்கில் கவனம் முக்கியம். 3. வேட்டை பூட்டி செல்வதில் கவனக்குறைவு கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள். வருமானம் ஏற்றம் இரக்கமாக இருக்கும். தொழில் துறையில் எதிர்ப்புகள் தோன்றி மறையும். வேலைப்பளு அதிகரித்து மன அழுத்தம் கூடும். அரசு அலுவலகங்களில் வேலை தாமதமாக. வியாபாரத்தில் இருந்த மந்த நிலை ஏற்படும். பொருள் வரவு குறைவாக இருக்கும். வீட்டில் சச்சரவுகள் ஏற்படும். கடன் சுமை குறையும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்புகள் ஏற்படலாம். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் குறையலாம். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நித்திரை சுகம் கெடலாம். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு எதிராக இருப்பவர்களை அடையாளம் காண்பீர்கள் உங்களை நம்பியே காரியத்தில் இறங்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: குழந்தைகளின் நடவடிக்கையால் மனக்குறை ஏற்படும். வீட்டு பிரச்சனைகள் இடையூறு ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வேலை இடத்துக்கு தாமதமாக செல்லக்கூடாது. 2. பணியிடத்தில் வீட்டு விஷயம் பேசக்கூடாது. 3. வேலை பார்க்கும் போது கவனச் சிதறல் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய தொழில்நுட்பம் கையாளப்படும். அது தொழிலை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். பண வரவு அதிகரிக்கும் கையிருப்பு கூடும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு கேட்டது கிடைக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் விரும்பியது நடக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாகன ஆசை நிறைவேறும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களின் ஆதரவு பக்க பலமாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: ஏதோ ஒரு மனக்குறை நெருஞ்சிமுள்ளாக உறுத்தும். எதிர்கால சிந்தனை தூக்கத்தை கெடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. 2. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 3. அதிகாரிகளிடம் கவனக்குறைவாக பேச வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! நல்ல செயல்கள் நடக்கும் நாள். தேவையான நேரத்தில் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். பார்ட்னர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் விரிவடைந்து வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களில் நல்ல பலன் கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். வேலை இடத்தில் மரியாதை கிடைக்கும். குலதெய்வத்தினுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தேவைகள் நிறைவேறும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு விரும்பியது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்குப் பெருகும். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். நண்பர்களின் உதவி மன பலத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் பலவீனம்: நம்பலாமா வேண்டாமா என்று இரண்டு மனம் இருக்கும். குழந்தைகளின் நடவடிக்கை மனக்குழப்பத்தை உண்டு பண்ணும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. கடன் வாங்கி அடுத்தவருக்கு கடன் கொடுக்க வேண்டாம். 2. ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். 3. வியாபார கணக்கு வழக்கில் அலட்சியம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்
கும்ப ராசி அன்பர்களே! குழப்பமான நிலை ஏற்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். தொழிலில் போட்டியாளர்களின் தலையீடு சிரமத்தை கொடுக்கும். குடும்பத்தில் ஏதோ ஒரு காரணத்தால் மனக்குழப்பம் உண்டாகும். வேலை இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது. மேலதிகாரிகளின் கோபம் மன உளைச்சலை உண்டாக்கும். வாகனப் பழுது ஏற்பட்டு சிரமத்தை கொடுக்கும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்தது தாமதமாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி அனாவசிய செலவு கூடும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வருவது வரட்டும் என்று வியாபாரத்தில் கவனம் செலுத்துவது. நெருங்கிய நண்பரின் உதவி கிடைப்பது. இன்று உங்கள் பலவீனம்: சீக்கிரத்தில் கோபப்பட்டு பேசுவது. மற்றவர் பேசுவதை புரிந்து கொள்ளாமல் நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். 2. உரிய நேரத்தில் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். 3. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் பதவி உயர்வு, பணி மாறுதல் உத்தரவு வந்து சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கையில் பணம் தாராளமாக புரளும். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் எண்ணங்கள் நிறைவேறும். இன்று உங்கள் பலம்: அரசியல்வாதியின் நட்பு புதிய பழம் சேர்க்கும். உறவினர்களின் ஒத்தாசை சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: எந்த வேலையும் உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பது. குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். 2. குறை இருந்தாலும் மற்றவர்களை கடுமையாக பேச வேண்டாம். 3. பற்று வரவு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்