மேஷ ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும் நாள். அரசியல்வாதியின் நட்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வேலை இடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குப் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது. உறவினர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பது. இன்று உங்கள் பலவீனம்: அடிக்கடி தலைவலி உண்டாகி வேலைக் கவனம் சிதறுவது. எதிர்பார்த்த முக்கிய செய்தி வர தாமதமாவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வியாபார கணக்குகளை கவனமாக எழுத வேண்டும். 2. தேவையில்லாத நண்பர்களை விலக்க வேண்டும். 3. ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியம் நடக்கும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை வளர்க்க திட்டம் வகுத்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை அதிகம் இருப்பதால் வீட்டில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் வந்து சேரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. ஜாமீன் கொடுப்பதில் நிதானமாக இருக்க வேண்டும். 2. வங்கிக்குச் செல்லும் போது பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். 3. வரவு செலவு கணக்குகளை முறையாக சரி பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும் நாள். தொழிலில் கவனமாக இருந்தாலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு வரலாம். வேலை இடத்தில் சக ஊழியர்களின் தொந்தரவு இருக்கும். மேலதிகாரிகளின் கோபம் மனதை வருத்தும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதமான பலன் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு பாதிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அதிகமாகும். இன்று உங்கள் பலம்: பண வரவு அதிகரிக்க இரவு பகல் பாராமல் உழைப்பது. எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்குவது. இன்று உங்கள் பலவீனம்: மனச்சுமை காரணமாக நித்திரை பாதிப்பு அடைவது. திடீர் செலவுகள் சிரமப்படுத்துவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வெளிப்பழக்கங்களில் எச்சரிக்கை தேவை. 2. சொந்தக்காரர் விஷயத்தில் தலையிடக்கூடாது. 3. பங்குதாரர்களிடம் சுமூகமாக பேச வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்
கடக ராசி அன்பர்களே! மேன்மையான செய்திகள் வரும் நாள். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை உயர்வு பணி மாறுதல் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வெளியூர் பயணங்களுக்கு ஏற்பாடுகள் நடக்கும். கண் திருஷ்டி பாதிப்பு விலகும். குல தெய்வத்தின் உடைய அருள் சித்திக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தஸ்து பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான உதவிகளை நண்பர்கள் செய்வார்கள். உறவினர்கள் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். உங்களின் நல்ல மனதை உறவினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. பற்று வரவு கணக்கில் அலட்சியம் காட்டக்கூடாது. 2. அந்நிய பெண்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 3. தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! மிதமான நன்மைகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் வளர்ச்சி பிடிக்காதவர்களின் பொறாமை பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமைகள் ஓரங்கட்டப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்காமல் போக கூடும். மனைவி ஏறுக்கு மாறாக நடக்கலாம். நன்மை செய்தவர்களே உங்களுக்கு எதிராக பேசக்கூடும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியதாமதம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் செலவுகளுக்கு உட்படுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறு உடல் பாதிப்பு அடையலாம். இன்று உங்கள் பலம்: உங்களை மட்டுமே நம்பி எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். எதிர்ப்புகளை முறியடிக்கும் தைரியம் பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் எதிர்ப்பு மன வேதனை அளிக்கும். காரியதாமதம் நிம்மதியை கெடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. உரிய நேரத்தில் வேலைக்கு போக வேண்டும். 2. மனம் ஒருநிலைப்பட்டு வேலை பார்க்க வேண்டும். 3. வேலை இடத்தில் தேவையற்ற பேச்சு தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! சிறப்பான செய்திகள் கிடைக்கும் நாள். தொழிலில் மேன்மையான நிலை ஏற்படும். லாபம் பெருகும் கையிருப்பு உயரும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இடத்தில் மரியாதையும் மதிப்பும் கூடும். வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்களின் ஆசை நிறைவேற்றப்படும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சமூக அந்தஸ்து பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு வேலை பார்ப்பீர்கள். கேட்ட பண உதவி உரிய நேரத்தில் வரும். இன்று உங்கள் பலவீனம்: சின்ன விஷயத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாத நிலை. உறவினர்களின் ஆதரவு குறைவு. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வரவு செலவு கணக்குகளை முறையாக எழுத வேண்டும். 2. வியாபார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 3. அடுத்தவருக்கு உத்தரவாதம் அளிப்பதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! வெற்றிகரமாக காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி யோகபலன் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிடைக்கும் . இன்று உங்கள் பலம்: வெளிநாட்டில் இருக்கும் நண்பர் நீங்கள் கேட்ட உதவியை செய்வார். அரசு வேலைகள் உடனே நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: உங்களின் அவசரங்களை வீட்டில் புரிந்து கொள்ள மாட்டார்கள். உறவினர்களின் தொல்லையும் சிரமப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. அடுத்தவர்களின் பேச்சை காதில் வாங்க கூடாது 2. ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. 3. தேவையில்லாமல் செலவுகள் செய்யக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! தொழில்துறையில் சில சிரமங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். எதிர்பாராத செலவுகள் வந்து சிரமப்படுத்தலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் மன அமைதியை கெடுக்கும். அரசு அலுவலகங்களில் கவனமாக வேலை பார்க்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக கூடாது. குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு காரியசித்தி தாமதமாகும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செலவுகள் அதிகரிக்கலாம். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பண வரவு மிதமாகும். இன்று உங்கள் பலம்: நீண்ட நாள் நண்பரின் ஒத்தாசை உதவியாக இருக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: எதிரிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படும். அரசு உதவி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. கணக்கு வழக்குகளை கவனமாக கையாள வேண்டும். 2. வேலை இடத்தில் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. 3. தவணைப் பணம் கட்டுவதில் தாமதம் இருக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! அருமையான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சிறப்பான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். கையிருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும். இன்று உங்கள் பலம்: அரசு அதிகாரிகளின் உதவி உடனே கிடைப்பது. அரசாங்க வேலைகள் தாமதம் இன்றி நடப்பது. இன்று உங்கள் பலவீனம்: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது. உறவினர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. அவசியமற்ற செலவுகளை செய்யக்கூடாது. 2. கடன் வாங்கி இன்னொருவருக்கு கடன் கொடுக்கக் கூடாது. 3. அரசாங்க வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது.. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! மங்கல காரியங்கள் நடக்கும் நாள். அரசு வேலையில் அனுகூலம் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். பெற்றோர்களின் குறைகள் தீர்க்கப்படும். தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு அரசியல் நட்பு கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: தொழில்நுட்பத்தோடு வியாபாரத்தை பெருக்க திட்டம் போடுவது. அரசாங்க உதவி பக்க பலமாக இருப்பது. இன்று உங்கள் பலவீனம்: வீட்டில் உள்ளவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் நடப்பது. இரவு தாமதமாக வீட்டிற்கு திரும்புவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை. 2. அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு மயங்க கூடாது. 3. வெளியூர் பயணத்தில் பணம் பாதுகாப்பு அவசியம். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தொழில் மிகச் சிறப்பாக நடக்கும். வியாபாரம் பெருகி கையிருப்பு அதிகரிக்கும் வேலை இடத்தில் மரியாதை கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு ஏற்படும். பணி மாறுதலும் கிடைக்கலாம். நகைகள் வாங்க வேண்டும் என்ற மனைவியின் ஆசை நிறைவேறும். பிள்ளைகளின் மீது அக்கறையும் கவனமும் அதிகரிக்கும் குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: புதிய நுட்பத்தோடு வியாபாரத்தை பெருக்க திட்டம் போடுவது. கால நேரம் பார்க்காமல் பாடுபடுவது. இன்று உங்கள் பலவீனம்: அவசரமான நேரத்தில் நண்பரின் உதவி தள்ளிப் போவது. மனைவியின் பேச்சு மனதை சங்கடப்படுத்துவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. திட்டமிட்ட வேலையை உடனே செய்து விட வேண்டும். 2. பணம் பரிவர்த்தனைகளில் நிதானம் வேண்டும். 3. வேலை இடத்தில் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம் விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான காரியம் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளைத் தாண்டி போராடி வெல்லும் மன தைரியம் இருப்பது. எந்த காரியத்திலும் தயங்காமல் இறங்குவது. இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சம்பந்தமில்லாத சர்ச்சைகள் ஏற்படுவது. மற்றவர்களின் பேச்சால் மன நிம்மதி இழப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் 2. பணத்தை கண்ட இடத்தில் வைக்க கூடாது. 3. வேலை இடத்தில் தேவையில்லாமல் பேசக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
u