குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக பேணி பராமரிப்பது எப்படி?
07 Nov,2025
இன்றைய சூழலில் மகப்பேறு மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகிறது. இதனால் பெண்மணிகளுக்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை பிரத்யேக சூழலில் வளர்த்தெடுக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதில் பெற்றோர்களுக்கு ஏராளமான சவால்கள் உள்ளது. இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் பின்வரும் குறிப்புகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியசாலையில் வைத்து பேணி பராமரிக்கப்பட்டாலும்.. அத்தகைய பிள்ளைகளை பெற்றோர்கள் தொடுதல் மூலமான பராமரிப்பை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
இதன் மூலம் அந்த குறை மாதத்தில் பிறந்த பிள்ளைகளின் வளர்ச்சி மேம்படும். குறிப்பாக அந்தப் பிள்ளையின் உடல் வெப்பநிலை மற்றும் உடல் எடை உயர்வதற்கு உதவி செய்யும். அத்துடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உணர்வு ரீதியான பந்தம் மேலோங்கும்.
வைத்தியசாலையிலிருந்து பிள்ளையை பராமரிக்க உங்களுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றால்.. அந்த பிள்ளைக்கான பிரத்யேக அறை - நோய் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் அமைத்திட வேண்டும். இதுபோன்ற தருணங்களில் பிள்ளையை பார்வையிட யாரையும் அனுமதிக்காதீர்கள்.
குறை மாத குழந்தை என்பதால் தாய்ப்பால் புகட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடும். குழந்தை தாய்ப்பாலை அருந்துவதில் தாமதம் ஏற்படலாம். இதனால் பொறுமையுடன் - நேசத்துடன் காத்திருக்க வேண்டும்.
இத்தகைய பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளைப் போல் தங்களுடைய பசி உணர்வை அழுகை மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் குறிப்பு மூலமாகவோ வெளிப்படுத்துவதில் தடையோ, தாமதமோ ஏற்படக்கூடும். இதனால் பிள்ளைகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும். இதனுடன் குழந்தையின் உடல் எடை அதிகரிப்பையும் , வளர்ச்சியையும் துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
மேலே விவரிக்கப்பட்ட குறிப்புகளை ஒவ்வொரு பெண்மணிகளும் , பெற்றோர்களும் உறுதியாக கடைப்பிடித்தால்.. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி- ஏனைய குழந்தைகளின் வளர்ச்சியை விரைவில் எட்டும்.