கடாபியின் மகனுக்கு ஜாமீன்
18 Oct,2025
லிபியாவின் தலைவராக இருந்த மும்மர் கடாபியின் மகன் ஹனிபால் கடாபி. ஹனிபால் கடாபி கடந்த 10 ஆண்டுகளாக லெபனான் சிறையில் உள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் லிபியாவில் காணாமல் போன ஷியா மத குரு மவுசா அல் சதர் காணாமல் போனது குறித்த தகவல்களை மறைத்ததற்காக ஹனிபால் கடாபி கைது செய்யப்பட்டார். தற்போது அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.