மசாலா விழுது அரைக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
முழு தனியா - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 6
முழு மிளகு - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
தேங்காய் - 1/2 கப் துருவியது
தண்ணீர்
உப்பு
கத்திரிக்காய் மசாலா கறி செய்ய
கத்திரிக்காய் - 1/2 கிலோ
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, முழு தனியா, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து காய்ந்த மிளகாய், முழு மிளகு, தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. மசாலாவை ஆறவிடவும்.
5. பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து, உப்பு சேர்க்கவும்.
6. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும்.
7. ஆறிய மசாலாவை மிக்ஸியில் போட்டு, முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும்.
8. பின் சிறிது தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
9. மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பில்லை, கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
10. இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
11. பின் இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி கிளறவும்.
12. கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
13. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.