சக ராணுவ வீரரை கொன்று அவரை சாப்பிட்ட ரஷ்ய வீரர் உயிரிழப்பு.. அதிர்ச்சியூட்டும் தகவல்
21 Jun,2025
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், கொலைகாரர்கள், மனித மாமிசத்தை உண்பவர்கள் உள்ளிட்டவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன
சக ராணுவ வீரரை கொன்று அவரை சாப்பிட்ட ரஷ்ய வீரர் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இருதரப்பிலும் ஏராளமான பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும் இரு நாடுகளும் விடாமல் போரை நடத்தி வருகின்றன. இந்த மோதல் காரணமாக உக்ரைனில் உயர் கல்வி படிப்பை தொடர்ந்த ஏராளமான இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் பல்வேறு சர்வதேச நாடுகள் சமாதான முயற்சியை மேற்கொண்ட போதிலும் அவை பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் போரின் போது உணவுப் பொருட்கள் கிடைக்காததால் பசி கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக சக ராணுவ வீரரை கொன்று, அவரை வீரர் ஒருவர் சாப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை உக்ரேனிலிருந்து வெளியாகும் பிரபல செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்படவில்லை. அவ்வாறு உயிரிழந்தவரின் பெயர் பெர்லோக் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், கொலைகாரர்கள், மனித மாமிசத்தை உண்பவர்கள் உள்ளிட்டவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் சக ராணுவ வீரரை கொன்று அவரை சாப்பிட்டவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் கோரின் என்பவர் 4 பேரை கொன்றதற்காக 2012 ஆம் ஆண்டு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவரை 2023 ஆம் ஆண்டு ரஷ்யா விடுவித்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன.