பாம்புகளை வேண்டும் என்றே கடிக்க விட்ட மருத்துவர்கள்.. விஷ முறிவு மருந்துக்காக இப்படி ஒரு பரிசோதனை
04 May,2025
டிம் ஃப்ரீட் என்பதுதான் அவரது பெயர். டிம் கடந்த 2001ம் ஆண்டு முதல் முறையாக பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிர் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், அவருடைய உடலில் சில மாற்றங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அவரது உடல், பாம்புக்கடிக்கு எதிராக ஆன்டிபாடி எனும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது.
இதனையடுத்து 'சென்டிவாக்ஸ்' எனும் நிறுவனம் இவரை தொடர்புகொண்டது. இந்நிறுவனம் மருத்துவ துறையை சேர்ந்த நிறுவனமாகும். பாம்புக்கடிக்கு எதிரான மருந்தை இது உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் டிம்-ஐ வாடகைக்கு எடுக்கிறது. இவரது உடலில் பாம்பு விஷத்தை செலுத்தி, அனைத்து வகை பாம்புகளுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். லேசான கரியமா இது? கொஞ்சம் விஷம் ஏறினாலும் மனுஷன் காலி.
இருப்பினும், இந்த முயற்சியை நிறுவனம் சிறப்பாக செய்து பார்த்தது. அதாவது மிக மிக பாதுகாப்பான முறையில் பாம்பின் விஷம் டிம் உடலில் செலுத்தப்பட்டது. பாம்புகளை கடிக்க வைப்பதன் மூலம் விஷம் செலுத்தப்பட்டது. இப்படி செலுத்தியபோது ஒருமுறை விஷம் அதிகமாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் கோமாவில் இருக்க வேண்டியதாயிற்று. பின்னர் எப்படியோ அவரது உயிரை காப்பாற்றினார்கள். இதனையடுத்து இப்போது அவருக்கு பாம்பின் விஷம் செலுத்தப்படுவதில்லை.
ஆனால் இதுவரை செலுத்தப்பட்ட விஷம் அவரது உடலில் அற்புதமான ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆன்டிபாடிகளை வைத்து விஷமுறிவு மருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கருப்பு மாம்பா, நாகம், டைப்பன், கிரைட் உள்ளிட்ட 13 வகை பாம்புகளுக்கு எதிராக 100% செயல்படுகிறது. இது தவிர 6 வகை பாம்புகளுக்கு பகுதியளவு பாதுகாப்பையும் கொடுக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது எப்படி செயல்படுகிறது என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். அதாவது பாம்பு கடியில் வரும் விஷம், முதலில் நரம்பு மண்டலத்தைதான் தாக்கும். இப்படி தாக்கும்போது நம்முடைய ரத்தம் உறைந்துவிடும். அப்படி நடந்தால் இதயத்திற்கு ரத்தம் போகாமல் நாம் உயிரிழந்துவிடுவோம். ஆனால், இந்த விஷ முறிவு மருந்து ரத்தத்தை உறையவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதன் மூலம் உயிர் காப்பாற்றப்படுகிறது. இந்த விஷ முறிவு மருந்தின் சந்தை மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்.
இது உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பாம்புகடியிலிருந்து பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது.