மட்டன் குழம்பு
23 Apr,2025
தேவையான பொருட்கள்
1/2 கிலோ மட்டன் ( ஆட்டிறைச்சி)
50 கிராம் இஞ்சி பூண்டு விழுது
5 கிராம் பட்டை, கிராம்பு,ஏலக்காய் பொடி
4 தக்காளி
3 பச்சை மிளகாய்
2 கொத்து கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
சிறிதளவு புதினா
100 மில்லி தயிர்
ண மூடி தேங்காய் விழுது
ண தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி கறி மசாலா
2 தேக்கரண்டி மல்லி தூள்
100 மில்லி எண்ணெய்
25 கிராம் நெய்
செய்முறை
1. முதலில் ஆட்டிறைச்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் நெய், ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பட்டை கிராம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மாலாத்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. பின்பு அதில் சுத்தம் செய்த ஆட்டிறைச்சியை சேர்த்து நன்றாக கிளறி அதில் தயிர் ஊற்றி,உப்பு தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடவும்.
4. பின்பு சிறிது நேரம் களித்து சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். மட்டன் குழம்பு தயார்.