உலகில் மிகவும் பிஸியான டாப் 10 விமான நிலையங்கள்.. ?
14 Apr,2025
சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையில் ஆண்டுக்கு 7 கோடியே 67 லட்சம் பயணிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது.
உலகில் மிகவும் பிஸியான டாப் 10 விமான நிலையங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உலக நாடுகளை இணைக்கும் புள்ளிகளாக விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் விமானங்களில் பயணிப்பதால் விமான நிலையங்கள் எப்போதும் பரபரப்பு நிறைந்தவையாக காணப்படுகின்றன.
ஒவ்வொரு நாடுகளை பொறுத்து அங்குள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. விமான பயணிகளை கையாளுவதற்கு அந்தந்த நாடுகளின் அரசு நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்த வகையில் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் விமான நிலையமாக அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்கு மட்டும் ஆண்டுக்கு 10 கோடியே 80 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். துபாய் நாடு அளவில் சிறியதாக இருந்தாலும், இங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு 9 கோடியே 23 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.
அமெரிக்காவின் டல்லாஸ் சர்வதேச விமான நிலையம் உலகில் பிஸியான ஏர்போர்ட்களில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு 8 கோடியே 78 லட்சம் பயணிகள் வருகிறார்கள். 4 ஆவது இடத்தில் ஜப்பானின் டோக்யோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு 8 கோடியே 50 லட்சம் விமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் ஆண்டுக்கு 8 கோடியே 38 லட்சம் பயணிகளுடன் 5 ஆவது பிஸியான ஏர்போர்ட்டாக உள்ளது. 6 ஆவது மற்றும் 7 ஆவது இடங்களில் அமெரிக்காவின் டென்வர் மற்றும் ஓஹேர் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
ஆண்டுக்கு 7 கோடியே 99 லட்சம் விமான பயணிகளை கையாளும் துருக்கியின் இஸ்தான்பூல் விமான நிலையம் பிஸியான விமான நிலையங்களில் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 7 கோடியே 78 லட்சம் விமான பயணிகளுடன் 9 ஆம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையில் ஆண்டுக்கு 7 கோடியே 67 லட்சம் பயணிகளுடன் 10 ஆவது இடத்திலும் உள்ளது.