வெளிநாட்டினருக்கு அதிகரிக்கும் சுற்றுலா வரி...மற்றொரு நாடு!
13 Apr,2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இஷ்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதனால் அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க சம்பந்தமே இல்லாமல் ஐரோப்பிய நாடு ஒன்று சுற்றுலா பயணிகள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே டிரம்ப் இஷ்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை போட்டு வருகிறார்.
இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தவறுக்கும் கூட நாடு கடத்தும் அபாயம் இருப்பதால் அங்குள்ள வெளிநாட்டினர் அச்சத்தில் இருக்கிறார்கள். திடீர் கட்டுப்பாடுகள் இது ஒரு பக்கம் இருக்க இப்போது மற்றொரு நாடும் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து போடப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மிக கடுமையாக பாதிக்கிறது.
அதாவது ஐரோப்பாவில் பல நாடுகளின் சுற்றுலா பயணிகள் விரும்பி பயணிக்கும் நாடான ஸ்பெயின் நாட்டில் தான் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திடீரென அதிகபட்ச எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவது பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே இந்த கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன கட்டுப்பாடு பார்சிலோனா மற்றும் டெனெரிஃப் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களில் திடீரென அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளால் கூட்ட நெரிசல்,உள்ளூர் மக்களுக்கு செலவு அதிகரிப்பது என பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதை சமாளிக்கவே உள்ளூர் அதிகாரிகள் கடுமையான விதிகளை அமல்படுத்தி உள்ளனர். திடீரென அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் சுற்றுலாவால் உள்ளூர் மக்கள் அதிகளவில் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்ய இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சுற்றுலா வரி பலேரிக் தீவுகள் பகுதியில் கூடுதல் வரி விதிக்கப்படுவதால் ஓவர் நைட் இந்த பலேரிக் தீவுகளில் தங்க அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பயணக் கப்பல் கட்டணம் 200% வரை அதிகரிக்கலாம். பார்சிலோனா பகுதியில் ஒரு நபருக்கான சுற்றுலா வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரிகள் மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஸ்பெயின் அறிவித்துள்ளது. மேலும், தீவுகளில் பல்வேறு பொருட்களயைும் ஸ்பெயின் நிர்வாகம் தடை செய்துள்ளது. அதன்படி ஸ்பெயின் தீவுகளில் கிரான் கனாரியாவில் புகைபிடித்தல் அல்லது வேப்பிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய குளியல் பகுதிகளில் ஸ்பீக்கரில் பாடல் கேட்பது, கடற்கரையில் சமைத்தல், ஷெல்களை சேகரித்தல், உடலுறவு கொள்வது, பொது பாதைகளை தடுப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் மேலும், வாக்கிங் சுற்றுலாவை பொறுத்தவரை மல்லோர்கா பகுதியில் ஒரு குரூப்பிற்கு 20 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், நகரின் சில பகுதிகளில் வாடகை கார்களை எடுக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லுக்மேஜர், பால்மா, கால்வியா மற்றும் சாண்ட் அன்டோனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9:30 மணி முதல் காலை 8 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்வதைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ட்டி படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது