.. ..
பிரேக்-அப் ஆன பிறகு இளைஞர்கள் அதிலிருந்து மீண்டு வரப் பெரிதும் சிரமப்படுவார்கள். பொதுவாக பிரேக்-அப்பிற்கு பிறகு அதில் இருந்து மீண்டு வர இளைஞர்கள், இளம்பெண்கள் பெரிதும் சிரமப்படுவார்கள். ஏதேதோ செய்தும் பார்ப்பார்கள். இதற்கிடையே உண்மையில் பிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர எத்தனை காலம் ஆகும் என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காதலிக்கும் ஜோடி திடீரென பிரேக் அப் செய்தால்.. அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் சிரமம்.. பிரேக் அப் ஆன பிறகும் கூட பலர் தங்கள் முன்னாள் காதலர்கள் மீது அன்பை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாகப் பல ஆண்டுகள் காதலித்து வருபவர்கள் திடீரென பிரேக்-அப் செய்யும் சூழல் உருவானால் அதில் இருந்து மீண்டு வருவது ரொம்பவே சிரமம்.
இதற்கிடையே இது குறித்துத் தான் இப்போது ஆய்வாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அதாவது பிரேக்-அப்பிற்கு பிறகு முன்னாள் பார்ட்னர்களை முழுமையாக மறக்க முடியுமா.. அப்படி மறக்க முடிந்தால் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் ஆகிய இரு கேள்விகளை அடிப்படையாக வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர்கள் ஜியா ஒய். சோங் மற்றும் ஆர். கிறிஸ் ஃப்ராலே ஆகியோர் நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் இப்போது Social Psychological and Personality Science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து 328 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வுக்கு உட்பட அனைவரும் பெரியவர்களாக இருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டு காதலித்து பிரேக்-அப் ஆகியிருக்க வேண்டும் என பல நிபந்தனைகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
காதல் ஆய்வு
இந்த ஆய்வில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. குறிப்பாக முன்னாள் காதலர் மீது இன்னும் எமோஷனல் ஃபீலிங் இருக்கிறதா? அவர்களுடன் நேரம் செலவிடப் பிடிக்குமா? என்பது போல பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது சில சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது..
அதாவது பிரேக்-அப் ஆகும் சமயம் முன்னாள் காதலர்களுடன் பலருக்கும் உணர்ச்சிப் பிணைப்பு இருக்கிறது. இருப்பினும், காலம் செல்ல செல்ல அது குறைந்து சீக்கிரமே உணர்ச்சிப் பிணைப்பு இல்லாமல் போய்விடுவது தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் முழுமையாக உணர்ச்சிப் பிணைப்பு இல்லாமல் போய்விடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
எவ்வளவு ஆண்டுகள் ஆகும்
இருப்பினும், இது உடனே நடந்துவிடாது. சராசரியாக ஒருவர் பிரேக்-அப்பில் இருந்து வெளியே வர சுமார் 4.18 ஆண்டுகள் வரை ஆகிறதாம்.. அதேநேரம் அவர்கள் உடனான உணர்ச்சிப் பிணைப்பு முழுமையாக இல்லாமல் போக சுமார் 8 ஆண்டுகள் வரை ஆவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காதல் எல்லாம் பலன் தராது
மேலும், முன்னாள் காதலரை மறந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவும் காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். பலரும் புதிதாக இன்னொருவரைக் காதலித்தால் பிரேக்-அப்பில் இருந்து வெளியே வந்துவிடலாம் எனச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அப்படிச் செய்வது எல்லாம் பலன் தருவது இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதேநேரம் பிரேக்-அப் ஆன பிறகும் முன்னாள் காதலருடன் டச்சில் இருந்து வந்தால் அது உணர்ச்சிப் பிணைப்பு தொடர காரணமாக இருக்கிறது. மேலும், கவலையுடன் இருப்போர் பிரேக் அப்பிற்கு பிறகும் முன்னாள் காதலர்களுடன் நீண்டகால பிணைப்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.