தேவையான பொருட்கள் ;
காளான் – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1 (வெட்டியது)
தக்காளி – 2 (வெட்டியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – 1/4 கப் (வெட்டியது)
புதினா – 1/4 கப் (வெட்டியது)
பச்சை மிளகாய் – 3 (வெட்டியது)
எண்ணெய் – 3 மேசை கரண்டி
நெய் – 3 மேசை கரண்டி
தேங்காய் பால் – 1/2 கப்
தயிர் – 2 மேசை கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 3
இலவங்கம் – 2
கிராம்பு – 5
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை ;
அரிசியை கழுவி அந்த அரிசியில் 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு கலக்க வேண்டும்.
கசகசாவை நீரில் ஊற வைத்து பின் அதனுடன் முந்திரி பருப்பைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தையும், மிளகாயையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
காளானை தேவையான அளவு வெட்டி வைத்து கொள்ள வேண்டும்
பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல் பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்தவுடன் நாம் அரைத்து வைத்து இருந்த பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின் கட் பண்ணி வைத்த காளானை போட்டுத் வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும் பின் அரைத்து வைத்த கசகசா முந்திரியை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, நெய், மஞ்சள் சிறுதி எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு தேங்காய்ப்பாலும் சேர்க்க வேண்டும்.
அதனுடன் ஊற வைத்த பிரியாணி அரிசியை குக்கரில் போட்டு கிண்டி மூடிவிட வேண்டும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து நிறுத்தி விடவும்.
ஆவி நின்றவுடன் குக்கரைத் திறந்து பிரியாணியை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும்.