உடலுறவு மாத்திரை தான் காரணமா? ஷேன் வார்ன் மரணம் குறித்து 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்
30 Mar,2025
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக சுழற்பந்து ஜாம்பவன் கடந்த 2022ம் ஆண்டு தாய்லாந்து சுற்றுலா சென்றபோது மாரடைப்பால் காலமானார். அவரது இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் ஷேன் வார்ன் இறந்து கிடந்த வில்லாவில் இருந்து உடலுறவுக்கான மாத்திரை பாட்டில் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை போலீசார் மறைத்ததாகவும் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது இறப்புக்கு அந்த மாத்திரை தான் காரணமா? என்ற கேள்வி எழுந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சுழல் சாம்பவனாக வலம் வந்தவர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் ஆகச்சிறந்த வீரராக ஷேன் வார்ன் இருந்தார்.
கடந்த 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஷேன் வார்ன் விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றி உள்ளார். அதன்பிறகு அவர் ஓய்வு பெற்றார். ஷேன் வார்ன் தனது 52 வயதில் மரணமடைந்தார். நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு தாய்லாந்துக்கு ஷேன் வார்ன் சுற்றுலா சென்றார். அங்க அவர் வில்லாவில் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் தனது அறையில் இறந்து கிடந்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. அவரது மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் ஷேன் வார்ன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. மேலும் அவரது உடற்கூறாய்விலும் ஷேன் வார்ன் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஷேன் வார்ன் மரணம் தொடர்பான சர்ச்சை என்பது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் ஷேன் வார்ன் மரணம் தொடர்பான விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஷேன் வார்ன்
மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்து நீண்டநேரம் உடலுறவு கொள்வதற்கான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தாய்லாந்தில் ஷேன் வார்ன் தங்கியிருந்த வில்லாவில் உடலுறவுக்கு தேவையான மாத்திரைகள் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி காமகிரா (Kamagra) பாட்டில் சிக்கியது. அந்த பாட்டிலில் மாத்திரைகள் இருந்தது. இந்த மாத்திரை என்பது விறைப்பு தன்மைக்கானதாகும். ஷேன் வார்ன் இறந்தவுடன் அவரது வில்லாவில்
மூத்த போலீஸ் அதிகாரி சென்று பார்வையிட்டார். அப்போது இந்த மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது. அதனை உடனடியாக அகற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில்டெனாபில் சிட்ரேட் (Sildenafil Citrate) உள்ளது. இது வயாக்ராவின் மூலப்பொருளாகும். ஷேன் வார்ன் மரணம் என்பது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மாத்திரைகள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரை விஷயத்தை மறைத்தது தொடர்பான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகாரிகளுக்கும் கூட தொடர்பு இருக்கலாம். ஏனென்றால் ஷேன் வார்ன் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வந்தவர். இதனால் அவரது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம்.
இதுபற்றி தாய்லாந்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‛‛மாத்திரை பாட்டிலை அகற்ற மேலிடத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்தது. அதனடிப்படையில் தான் அகற்றினோம். மாத்திரை அகற்ற ஆஸ்திரேலியா அதிகாரிகள் கூட கூறியிருக்கலாம். ஷேன் வார்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான காரணம் எதுவும் அறிக்கையில் இல்லை. இயல்பு நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காமக்ரா மாத்திரை அவரது மரணத்துக்கு காரணம் என்று உறுதி செய்யப்படவில்லை. ஏனென்றால் அது மிகவும்
சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட். இதற்கு பின்னால் பெரிய நபர்களின் கைகள் இருந்தன. மேலும் காமக்ரா பாட்டிலில் இருந்து அவர் எவ்வளவு எடுத்து கொண்டார் என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் வாந்தி மற்றும் ரத்த கறையும் இருந்தது'' என்று கூறியுள்ளார். இதனால் ஷேன் வார்ன் மரணத்துக்கு உடலுறவுக்கான காமக்ரா மாத்திரை தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.