பாரிஸ்: 500 தெருக்களில் வாகனங்களுக்கு தடை?
24 Mar,2025
பாரிஸ் நகரில் 500 தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து இன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பாரிஸ் நகரில் காற்று மாசடைவதை தடுக்க மோட்டார்
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பாரிஸ் நகரில் ஏற்கனவே 200 தெருக்களில் கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க பிரான்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது.