புதிய வகை "கொரோனா" கண்டுபிடிப்பு! மனிதர்களுக்கு பரவுமா?
19 Mar,2025
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவுக்கு இணையாக இது இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாட்டையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.. வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. பல லட்சம் பேரை நாம் இழக்க வேண்டி இருந்தது.
கொரோனா வைரஸ் கொரோனாவால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, உலகெங்கும் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. பல நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படவும் கூட கொரோனா காரணமாக இருந்தது. கொரோனா வைரஸை சமாளித்துவிட்ட போதிலும், அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை.
புதிய வகை வைரஸ் இதற்கிடையே பிரேசில் நாட்டில் இப்போது வௌவால்களில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்திய மெர்ஸ் (MERS) வைரஸுக்கு இணையாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெர்ஸ் என்ற ஒரு வகை கொரோனா வைரஸ் கடந்த 2012ம் ஆண்டு முதலில் சவுதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டது.. அப்போது சுமார் 850க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருந்தது.
மனிதர்களை தாக்குமா இந்த புதிய வகை வைரஸ் மனிதர்களை பாதிக்குமா இல்லையா என்பது தான் இப்போது பலருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்குமா என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் வைரஸின் ஸ்பைக் புரதங்களை ஆய்வு செய்தபோது அவை MERS-CoVக்கு இணையாக இருந்தது. வரும் காலத்தில் ஹாங்காங்கில் இந்த வைரஸ் குறித்து விரிவான ஆய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு வரிசை, சுமார் 72 சதவீதம் மெர்ஸ் வைரஸின் மரபணுவை போல இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த புதிய வகை வைரஸ் பிற விலங்குகளை பாதிக்குமா அல்லது மனிதர்களை தாக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் விரிவான ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் சொல்வது என்ன! ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "வௌவால்களில் இருக்கும் புதிய கொரோனாவை கண்டறிய இந்த ஆய்வுகளை செய்தோம். இந்த ஆய்வுக்காக 16 வெவ்வேறு வௌவால் இனங்களிலிருந்து 423 மாதிரிகளை எடுத்துள்ளோம்.
அதில் வடகிழக்கு பிரேசிலில் உள்ள ஃபோர்டலேசா நகரில் வௌவால்களிலிருந்து ஏழு கொரோனா வைரஸ்களை அடையாளம் காண முடிந்தது. வௌவால் பிரச்சினை வைரஸ்கள் அதிகம் இருக்கும் விலங்குகளில் ஒன்றாக வௌவால்கள் உள்ளன. வௌவால்களில் இருந்து எப்போது எந்த வைரஸ் வரும் என்றே தெரியாது. இதனால் நாம் வௌவால்களில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாங்கள் நடத்திய ஆய்வின் விளைவாகவே இந்த புதிய வைரஸை கண்டறிந்துள்ளோம். இது மனிதர்களை தாக்கினால் பாதிப்பு மோசமாக போகலாம்.. ஆனால், மனிதர்களை இது தாக்குமா என்ற கேள்விக்கு எங்களிடம் இப்போது பதில் இல்லை. விரைவில் அடுத்த கட்ட ஆய்வுகளை தொடங்கவுள்ளோம்" என்றார்.