சீனா! மண்ணுக்குள் புதைந்துள்ள 10 டன் பொக்கிஷம்! 60 ஆயிரம் வருஷத்துக்கு போதும்!
04 Mar,2025
உலகத்திற்கு ஒரு ஆச்சர்யமளிக்கும் செய்தியை அறிவித்திருக்கிறது சீனா. தங்கள் நாட்டில் சுமார் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வல்லரசு நாடாக ஆதிக்கம் செலுத்தும் சீனா பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய நாடாக இருக்கிறது.
அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குவதற்காக புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த நாட்டின் விஞ்ஞானிகள். இது ஒருபுறம் இருக்க கனிம வளத் துறையிலும் தன்னிறைவு பெற்ற நாடாக சீனா விளங்குவதற்கு அதன் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதற்கு வெற்றி தரும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் தங்க குவியல் ஒன்றை அந்நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீறுவதற்குள் தற்போது தங்கள் நாட்டில் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக சீனா அறிவித்திருக்கிறது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்று உள்மங்கோலியா இங்குள்ள பயூன் ரோபோ பகுதியில் அரியவகை கனிமங்கள் காணப்படுகின்றன. ஏற்கனவே அங்கு மிகப்பெரிய அளவிலான 5 சுரங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 170க்கும் மேற்பட்ட கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு தோரியம் இருக்கிறதா என்பது குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். சமீபத்தில் அது தொடர்பான விரிவான அறிக்கை சீன அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அப்பகுதியில் சுமார்
10 லட்சம் தன் தோரியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது. அணுமின் உற்பத்தியை பொருத்தவரை யூரேனியம், ப்ளூட்டோனியம் ஆகிய தாதுக்களுக்கு அடுத்தபடியாக தோரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் அதனை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மேலும் மின்சாரத்தை தயாரிப்பதற்கான செலவும் வெகுவாக குறையும். யுரேனியம் ப்ளூட்டோனியம் போன்றவை அணுமின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல ஒரு தனிமம் தான் தோரியம். ஆனால் யுரேனியம், ப்ளூட்டோனியத்தை விட அதிக சக்தி வாய்ந்தது. உதாரணத்திற்கு ஒரு கிராம் யுரேனியத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்கிறோம் என்றால் ஒரு கிராம் தோரியத்திலிருந்து 200 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள். தற்போது அணுமின் சக்தி தொடர்பாக ரஷ்யா, சீனா இடையே கடும் போட்டி உள்ளது.
இந்த நிலையில் தான் சீனாவில் மிகப்பெரிய தோரியம் குவியல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு ஆய்வாளர்களையும் உற்பத்தியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சீனாவின் கோபி டெசர்ட் பகுதியில் மிகப் பெரிய தோரியம் அணுமின் உற்பத்தி நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த அணுமின் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும். இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய தோரியம் புதையல் கிடைத்திருப்பதால் மேலும் பல பகுதிகளில் புதிய தோரியம் அணு மின் நிலையங்களை அமைக்க சீனா திட்டமிட்டு இருக்கிறது.