ஒட்டாவா: கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் வருகிறது என்று கூறி, அந்நாட்டு பொருட்களுக்கு 25% வரியை டிரம்ப் விதித்திருந்தார். இந்நிலையில், இன்று முதல் அமெரிக்க பொருட்களுக்கும் கனடாவில் 25% வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்திருக்கிறார். இரு நாடுகளின் இந்த அறிவிப்பு காரணமாக வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இந்த போரால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
வரி குறித்து ட்ரூடோ விடுத்திருந்த அறிக்கையில், "டிரம்ப் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு, எங்கள் நாட்டு பொருட்களுக்கு வரியை அமெரிக்க அரசு விதித்தால், நாங்களும் பதிலுக்கு $107 பில்லியன் (8.8 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு 25% வரியை போடுவோம். எங்களுடைய வரி மார்ச் 4ம் தேதி அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும். அமெரிக்கா போட்ட வரி திரும்பப்பெறப்படும் வரை, நாங்கள் போட்ட வரியை திரும்ப பெற மாட்டோம். அதேபோல அமெரிக்காவிலிருந்து வரும் பல்வேறு பொருட்களுக்கு நாங்கள் கடுமையான தரநிலையை நிர்ணயிப்போம். இது குறித்து மற்ற மாநிலங்களுடன் பேசுவோம்" என்று கூறியிருக்கிறார். ட்ரூடோவின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது.
கனடாவுக்கு அமெரிக்காவுடனான வர்த்தகம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதேபோல அமெரிக்காவுக்கும் கனடா முக்கியம். தினமும் 1.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கனடாவுடன் அமெரிக்கா பிசினஸ் செய்கிறது. அமெரிக்கா அதிக அளவில் பிசினஸ் செய்யும் 2வது நாடு கனடாதான். மட்டுமல்லாது ஏராளமான அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கனடா முதலீடு மூலமாக கிடைக்கிறது. ஆட்டோமொபைல், வேளாண்மை, தொழில்துறை உற்பத்தி, மற்றும் சேவை துறைகளில் கனடாவின் பங்களிப்பு மிக அதிகம். Powered By தவிர, அமெரிக்காவுக்கு தேவையான கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மரப்பொருட்கள் ஆகியவை கனடாவிலிருந்துதான் போகிறது. எனவே கனடா அமெரிக்காவுக்கு மிக முக்கியம். ஆனால், வரி விஷயத்தை வைத்துக்கொண்டு கனடாவை
அமெரிக்கா சீண்டி பார்த்து வருகிறது. இது மட்டுமல்லாது டிரம்ப்பின் வாய் துடுக்கு பேச்சு, கனடாவை ஆத்திரமடைய செய்திருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. 51வது மாகாணமாக கனடாவை இணைத்துக்கொள்வதாக டிரம்ப் பேசியிருந்தார். கனடா தனி நாடு, அதை எப்படி ஒரு மாகாணமாக சேர்த்துக்கொள்ள முடியும்? டிரம்ப்பின் இந்த பேச்சு கனடா மக்களால் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. இப்படி தொடர்ந்து கனடாவை நெருக்கடி கொடுத்து வந்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கவே, தற்போது 25% வரி அறிவிப்பை ட்ரூடோ வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பால் கனடாவுக்கும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இது கௌரவ பஞ்சாயத்து.
எனவே என்ன ஆனாலும் பாத்துக்கலாம் என ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு இதனால் சிக்கல்தான் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வர்த்தக போரால் இந்தியாவின் தலை உருளவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெினல் மென்பொருள், மருந்துகள், ஆட்டோமொபைல் பாகங்கள், உரம் போன்றவற்றை அமெரிக்காவுக்கும், கனடாவுக்கம் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. வர்த்தக போர் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கினால், இந்திய ஏற்றுமதி குறைந்துவிடும். டிரம்ப்பின் வாய் பேச்சுக்கு இது தேவைதான் என ஒரு தரப்பினரும், மறு தரப்பினர் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!