நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார்.
கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார்.
சீமானின் வீட்டில் என்ன நடந்தது?
சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்: வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த தொண்டர்
பெரியாரை விமர்சித்து, அண்ணாவை புகழ்ந்த சீமான் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதகவுக்கு கைகொடுத்ததா?
சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.
இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார்.
"மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.
இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார்.
நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது?
நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.
ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.
"ஆஜராக முடியாது" - சீமான்
இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார்.
"எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார்
"நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார்.
"என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார்.
சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் தமிழ் பேசியது.
"வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
நடைமுறை என்ன?
காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார்.
''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி.
கருத்துக்கள
இதில் காணப்படும் காவல் அதிகாரியின் தகப்பனார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடத்தில் கொலையானார் என்று ஒரு தகவல்??
கருத்துக்கள
நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி , கொலை மிரட்டல் , பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட (417,420,354,376, 506(1)) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வழக்கில் மனவருத்தமடைந்த நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதனால் சீமான் தரப்பு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி சீமான் மீது உள்ள வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்திருக்கிறது.
நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களையும் தகவல்களையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் விசாரிக்க அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து கடந்த 24-ம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்ரவரி 27-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணக்கு ஆஜராகும்படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு, அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் டீம் காவல் நிலையத்தில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகி எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துவிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாக போலீஸாரிடம் கூறினர். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை வளசரவாக்கம் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை.நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி
அதனால் பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டில் இரண்டாவது சம்மனை வளசரவாக்கம் போலீஸார் ஒட்டினர். போலீஸார் அங்கிருந்து சென்றதும் சீமான் வீட்டிலிருந்து வந்தவர், அந்த சம்மனை கிழித்தெறிந்தார். அதனால் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டுக்குள் போலீஸார் நுழைய முற்பட்டனர். அவர்களை காவலாளி ராஜ் தடுத்தார். அப்போது போலீஸாருக்கும் சீமான் வீட்டு காவலாளி ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து காவலாளி ராஜை போலீஸார் பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்த போலீஸார் அதை பறித்தனர். ஆனால் ராஜ், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
அப்போது ராஜிக்கும் போலீஸாருக்கும் போலீஸ் வாகனத்துக்குள்ளேயே கடும் போராட்டம் நடந்தது. இறுதியில் ராஜிடமிருந்து போலீஸார் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து சீமான் வீட்டிலிருந்த சுபாகர் என்பவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீஸார் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், ``நாங்கள் சம்மனை ஒட்டிவிட்டு நாளை (28-ம்தேதி) ஆஜராகும்படி கூறிவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு சம்மனை சீமான் வீட்டிலிருந்தவர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்து விசாரிக்க நீலாங்கரை போலீஸார் சென்றபோதுதான் அவர்களை காவலாளி ராஜிடம், ஊழியர் சுபாகரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீமான் வீட்டில் நடந்த சம்பவத்தை நீலாங்கரை போலீஸார் விசாரிக்கிறார்கள்" என்றனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சம்மனை ஏன் கிழித்தீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது அவதூறாக எங்களை காவலாளியும் அங்கிருந்த ஊழியரும் பேசினர். அதனால் அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். காவலாளி ராஜிடமிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
கருத்துக்கள
“போலீஸ் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன்... என்ன செய்ய முடியும்?” - சீமான் திட்டவட்டம்
ஓசூர்: “போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும் என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?” என்று நடிகை விஜயலட்சுமி வழக்கு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகததால் அவரது வீட்டின் கதவில் போலீஸார் சம்மனை இன்று (பிப்.27) ஒட்டினர். கதவில் ஒட்டப்பட்ட அந்த சம்மனை, அங்கிருந்த காவலர் கிழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டு காவலாளி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது.இது தொடர்பாக ஓசூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “என்னால் வரமுடியாது. சென்னை வந்தவுடன் வருவதாக கூறியிருந்தேன். நான் எங்கும் ஓடவில்லை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். இன்று ஓசூரில் இருக்கிறேன் என்பது குறித்து போலீஸாருக்கும் தெரியும். நான் வருகிறேன் என்று கூறியும், வீட்டில் சம்மன் ஒட்டி வைத்து, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு எல்லாம் நான் அச்சப்பட மாட்டேன்.
நடிகையின் புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி நான்தான் வழக்குத் தொடர்ந்தேன். இருவரையும் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஜெயலலிதா, எடப்பாடி முதல்வராக இருந்த, கடந்த 10 ஆண்டுகள் அந்த நடிகை (விஜயலட்சுமி) வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை அவர்களால் சாமளிக்க முடியாத நேரங்களிலும், தேர்தல் சமயங்களிலும் இந்த நடிகையை வரழைத்து விடுகின்றனர்.
இந்த வழக்கில் உடனடியாக ஆஜராக என்ன அவசரம் இருக்கிறது? கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் விசாரணை செய்கின்றனர். இதையே தான் சொல்லி வருகிறேன். இந்த வழக்கில், போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும், என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?,” என்று அவர் கூறியுள்ளார்.
பின்னணி என்ன? - முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நடிகை விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்..
நாளை போலீஸில் ஆஜராகாத பட்சத்தில் சீமான் கைதுசெய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
திராவிட கழகத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆகியோர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
சீமானின் தொடர் விமர்சனம்
இதனால் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதற்கு முன்பு திருச்சி சரக டிஐஜியான வருண் குமார் மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் திருச்சி காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரையும் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நேரத்தில, பெரியாரை விமர்சனம் செய்த வழக்கில் கைது செய்தால் அரசியல் ரீதியாக சீமானுக்கு ஆதரவு பெருகும் என்று கருதி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்தால்தான் சரியாக இருக்கும் என்று காவல்துறையினரும், ஆட்சியாளர்களும் முடிவெடுத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் தான் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தி 164 ஸ்டேட்மெண்ட் பெற்று மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் இருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடினார் சீமான்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்ரவரி 27) சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற டீம் விசாரணை மேற்கொண்டது.
image-564-1024x608.png
போலீஸுக்கு வந்த தகவல்
இதில், விஜயலட்சுமி ஆடியோ வீடியோ ஆதாரம், புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்திருந்தார்.
இதற்கிடையே சீமான் நேற்றும், நேற்று முன்தினமும் ராணிப்பேட்டை, வேலூரில் நிர்வாகிள் கூட்டத்தை நடத்தினார், இன்று கிருஷ்ணகிரி சென்று நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததால், நேற்று இரவே கிருஷ்ணகிரி சென்று ஹோட்டலில் தங்கிவிட்டார்.
அதனால் சீமானால் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று வாய்தா கேட்டு மனு கொடுத்தனர்.
அதேசமயம் நேற்றிரவு சீமான் தங்கியிருந்த ஹோட்டலை போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
காரணம், கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலமான பெங்களூரு வழியாக சீமான் தப்பித்துவிடலாம் என்று தகவல் கிடைத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இந்தசூழலில் நீலாங்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று போலீசார் சம்மன் கொடுத்தனர். வீட்டில் உள்ளவர்கள் சம்மனை வாங்க மறுத்ததால், கேட்டில் அதை ஒட்டினர்.
அப்போது சீமான் வீட்டின் டிரைவரான சுபாகர் ஆவேசமாக வந்து கேட்டில் ஒட்டிருந்த சம்மனை கிழித்து எறிந்தார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் தட்டிக்கேட்ட போது, போலீசாருக்கும் சீமான் வீட்டில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு செக்யூரிட்டியாக இருந்த அமுல்ராஜ் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுக்க, உடனடியாக அவரை மடக்கி பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள் போலீசார்.
சம்மனை கிழித்த சுபாகரையும் கைது செய்தனர். இவர் சென்னையை சேர்ந்தவர். செக்யூரிட்டி அமுல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ajx6OioD-image-566.png
அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், இதற்கு லைசென்ஸ் இருக்கிறதா, ரினிவெல் செய்யப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
கைதாக வாய்ப்பு?
மேலும் இன்று வழங்கப்பட்ட சம்மனுக்கு சீமான் நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றால் அதிரடியாக கைது செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
eqvGke8N-image-565.png
நீலாங்கரையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கிருஷண்கிரியில் உள்ள தனது கணவருக்கு தொடர்புகொண்டு சீமான் மனைவி பதற்றமாக தகவலை தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில், நாளையும் நான் நேரில் ஆஜராகமாட்டேன். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், நான் தர்மபுரியில் நடக்கும் கூட்டத்துக்கு செல்கிறேன் என்று பேட்டி அளித்திருக்கிறார் சீமான் .
இதனால் அடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது
வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒரு அரசியல் கட்சி தலைவர் வீட்டிலேயே இப்படி என்றால் சாதாரண மக்கள்?????
வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
வீடியோ பார்த்தேன், பொலிஸ் அதிகாரி அராஜகமாத்தான் நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தான் முதலில் தாக்கி இருக்கின்றார்.
சம்மனை கிழித்தது தவறு. ஆனால் அதற்காக இந்த அதிகாரி செய்தது தவறுமட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம்.
காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.
கருத்து
நேற்று அண்ணன் சீமான் அவர்களது வீட்டில் நடந்தது அதிகார அத்துமீறல்; அடாவடித்தனம்! அட்டூழியம்!
வழக்கின் விசாரணைக்கு அழைப்பாணை (SUMMON) விடுக்கப்படுவது என்பது மிக இயல்பான நடைமுறை. அது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நேரிலோ அல்லது அவரைச் சார்ந்தவர்களிடமோ கொடுக்கப்படும். எவரையும் அணுக முடியாதபட்சத்தில், தொடர்புடையவரின் வீட்டில் அதனை ஒட்டி, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள் காவலர்கள். இவ்வளவே!
அண்ணன் சீமானைப் பொறுத்தவரை வழக்கு, அழைப்பாணை, விசாரணை, கைது, சிறை என எதுவும் புதிதில்லை. அண்ணன் மீதான வழக்குகளுக்கு வளசரவாக்கத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலோ அல்லது சின்ன நீலாங்கரையிலுள்ள வீட்டிலோ காவலர்கள் அழைப்பாணை வழங்குவார்கள். கட்சி அலுவலகத்திற்கு அழைப்பாணை வழங்க வந்த காவலர்கள் உணவருந்தி சென்ற நிகழ்வெல்லாம் உண்டு.
நேற்றைய தினம் அண்ணன் சீமான் கிருஷ்ணகிரியில் இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதனால், அழைப்பாணையை காவலர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வந்து வழங்கியிருக்கலாம். இல்லையெனில், அண்ணன் சீமான் வீட்டில் உள்ளவர்களிடம் வழங்கியிருக்கலாம். மாறாக, வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே அவர்கள் முன்னிலையிலேயே கதவில் ஒட்ட வேண்டிய அவசியமென்ன? அண்ணன் சீமான் தரப்பை அணுக ஆட்கள் இருக்கும்போது கதவில் ஒட்டியது எதற்கு? அதன்பிறகு, அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வளசரவாக்கம் காவலர்கள் சென்றுவிட்டார்கள். அதாவது, அந்த அழைப்பாணை அண்ணன் சீமானுக்குக் கொடுக்கப்பட்ட கணக்குதான்; அந்த அழைப்பாணைக்கு நேர்நிற்கவில்லையென்றால், சட்டப்பூர்வ நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளலாம். மற்றபடி, ஒட்டப்பட்ட அழைப்பாணையைக் கிழித்தாலோ, காறி உமிழ்ந்தாலோ, கழுதைத் தின்றாலோ, காக்கை எச்சமிட்டாலோ அதில் தலையிட காவல்துறைக்கு எவ்வித உரிமையுமில்லை. அதனால், வளசரவாக்கம் காவலர்கள் அழைப்பாணையை ஒட்டிவிட்டுச் சென்ற பிறகு, அதனைக் கிழித்ததில் எந்த சட்டச் சிக்கலுமில்லை.
இப்படியிருக்க, மூக்கு வியர்த்தது போல நீலாங்கரை காவலர் பிரவீன் ராஜேஷ் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய வேண்டிய அவசியமென்ன? வழக்கு இருக்கும் வளசரவாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களே சென்றுவிட்டப் பிறகு, நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு அங்கு என்ன வேலை? கதவைத் திறந்ததும் சனநாயகப்பூர்வமான உரையாடலைக்கூட நிகழ்த்தாது எடுத்த எடுப்பிலேயே அண்ணன் அமல்ராஜ் மீது கைவைத்து சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்தும், ஒருமையில் பேசியதும், தாக்கியதும் எதற்கு?
காவல்துறை ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் அண்ணன் அமல்ராஜை குற்றவாளி போல நடத்த வேண்டிய அவசியமென்ன? குற்றவாளிகளைக்கூட கைதி என அழைக்கக்கூடாது; சிறைவாசி என அழைக்க வேண்டும். கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லக்கூடாது எனும் விதிமுறைகள் இருக்கும்போது, ஒரு முன்னாள் இராணுவ வீரரை இவ்வளவு மோசமாகவா நடத்த வேண்டும்? தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவரது வீட்டுக்குள் திருடன் போல அத்துமீறுவதா சனநாயகம்?
சாதாரண அழைப்பாணை விவகாரத்தை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் இவ்வளவு களேபரமாக மாற்றியது யாரைத் திருப்திப்படுத்த? ‘அப்பா செத்ததுக்கு பழிவாங்கும் மகன்’ எனும் பழைய படத்தை ஓட்டி, வன்மத்தைத் தீர்க்க வந்தாரா பிரவீன் ராஜேஷ்? தனது தந்தை ராஜீவ்காந்தியோடு இறந்தார் என்பதற்காக, அதனை மனதில் வைத்துக்கொண்டு வஞ்சம் தீர்க்க முனைந்தாரா? அண்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலைக்கு எதிராக பிரவீன் ராஜேஷ் குடும்பம் நின்றதன் நீட்சியா இது? எங்கள் அண்ணன் பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலினும்தான் கட்டித் தழுவினார். அவ்வளவு ரோசமிருந்தால் அந்த ஸ்டாலினுக்குக் கீழே காவலராக வேலைசெய்யமாட்டேனென வேலையைத் துறந்துவிட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு இந்த வெட்டி வீராப்பு?
துளியும் உண்மையின்றி, அண்ணன் அமல்ராஜ். துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், காவல் ஆய்வாளரைத் தாக்கியதாகவும் பச்சைப்பொய்யுரைத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள். எல்லா அயோக்கியத்தனங்களையும், அத்துமீறல்களையும் செய்தது பிரவீன் ராஜேஷும், அவரை ஏவிவிட்ட திமுக அரசும். இதில் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் அண்ணன் அமல்ராஜும், அழைப்பாணையைக் கிழித்ததற்காகச் சிறைப்படுத்தப்பட்ட சுபாகரும்.
திமுகவுக்கு ஏவல் வேலைபார்க்
Share this: