டிரம்ப் ஆட்டம்! ஒரே இரவில் பல கோடி போச்சு
26 Feb,2025
அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே நேற்று ஒரே இரவில் பிட்காயின் மார்க்கெட் சரிந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம்.
உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி, பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோகாயின் மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். எச்சரித்த மாதிரியே நடக்குதே கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான்,
என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். பிட்காயின் மதிப்பு என்ன? இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று Bitcoin (BTC) ஒரே நாளில் $90,000 க்கு கீழே சரிந்தது. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. நேற்று ஒரே நாளில் 8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2100 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 90 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்தபடியே வரும் நாட்களில் மேலும் பிட்காயின் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன விதமான கரன்ஸி இது? உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.
இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
பிளாக் செயின்: பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.