ஓடும் ரயிலில் சீரியல் நடிகையிடம் காவலர் செய்த அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு
25 Feb,2025
சென்னையில் ஓடும் ரயிலில் சீரியல் நடிகையிடம் நகைப்பையை பறித்து கொண்டு தப்பிக்க முயன்ற காவலரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு பாட்ஷா தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான ரேணுகா. சீரியல் நடிகையாக இருந்த இவர், தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு அங்கிருந்து காவேரி விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை ஒரு ஹேண்ட் பேக்கில் போட்டு அதனை தனதருகே வைத்து கொண்டு உறங்கி உள்ளார்.
இந்நிலையில், ரயில் வாலஜா நிறுத்ததில் நின்றபோது நபர் ஒருவர் ரேணுகா இருந்த பெட்டியில் ஏறி உள்ளார். பின்னர் ரயில் புறப்பட்டவுடன் ரேணுகா அருகில் வந்த அந்த நபர், ரேணுகா வைத்திருந்த கைப்பையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட ரேணுகா, தனது கைப்பையை கொடுக்கும்படி அந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து, அந்த ஹேண்ட் பேக்கை ஓடும் ரயிலிலிருந்து அவர் வெளியே எறிந்துள்ளார்.