ஃபோர்பஸ் பத்திரிகை சமீபத்தில் உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகளை வெளியிட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் எட்டு நாடுகள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை. இதில் இந்தியாவுடன் நட்புறவைக் கொண்ட தீவு நாடான மடகாஸ்கர் 10வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம், அவற்றின் மோசமான பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. உலகின் 10 ஏழ்மையான நாடுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தெற்கு சூடான்: தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் ஏழ்மையான நாடு பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2011-ல் இறையாண்மை பெற்ற நாடாக மாறிய இந்த சிறிய கிழக்கு ஆப்பிரிக்க நாடு, 11.1 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகையுடன் மொத்த ஜிடிபி $29.99 பில்லியனைக் கொண்டுள்ளது.
டாவது ஏழ்மையான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.15 பில்லியன் ஆகும். புருண்டியின் விரைவான மக்கள் தொகை வளர்ச்சியும், அதிகமான விவசாய மக்கள் தொகையும் அதன் பொருளாதார துயரங்களுக்கு முக்கிய காரணிகளாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வறுமை ஒழிப்பு தினம்: உண்மையில் உலகில் ஏழ்மை குறைந்து வருகிறதா? - BBC News தமிழ்
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR): 5,849,358 மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.03 பில்லியன் ஆகும். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடாகும். இந்த சிறிய நாட்டில் தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரங்கள் நிறைந்த இருப்பு இருந்தாலும், அரசியல் ஸ்திரமின்மை, ஆயுத மோதல்கள், 80 சதவீத குடிமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஒரு தோல்வியுற்ற நாடாக அதை மாற்றியுள்ளன.
வறுமை என்னும் நோயை தீர்க்க வா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி, உலகளவில் 4வது ஏழ்மையான நாடாக உள்ளது. 21,390,465 மக்கள் தொகை கொண்ட இந்நாட்டின் ஜிடிபி $10.78 பில்லியன் ஆகும். இந்த ஆப்பிரிக்க நாடு விவசாயத்திற்கு மழையையே பெரிதும் நம்பியுள்ளது. இதனால் காலநிலை மாற்றம் மற்றும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்
மொசாம்பிக்: கிழக்கு ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடான மொசாம்பிக், உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும், மொசாம்பிக் பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மற்றும் கும்பல் வன்முறையால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. கூடுதலாக இயற்கை பேரழிவுகள், நோய்கள், விரைவான மக்கள் தொகை வெடிப்பு, குறைந்த விவசாய உற்பத்தித் திறன் மற்றும் செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
..
சோமாலியா: ஆப்பிரிக்காவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியா, கடற்கொள்ளையர்களுக்குப் பெயர் பெற்றது. 19,009,151 மக்கள் தொகையுடன், $13.89 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இது உலகின் 6வது ஏழ்மையான நாடாகும். உள்நாட்டுப் போர் அரசு மற்றும் பொருளாதாரத்தை சரிவிற்கு இட்டுச் சென்றது,
காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC): சஹாரா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு உலகின் ஏழாவது ஏழ்மையான நாடாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $79.24 பில்லியன் மற்றும் 104,354,615 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்துள்ள போதும், காங்கோ கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
லைபீரியா: 5,492,486 மக்கள்தொகை கொண்ட இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடு, உலகின் 8வது ஏழ்மையான நாடாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் $5.05 பில்லியன் மட்டுமே. நிபுணர்களின் கூற்றுப்படி, லைபீரியாவின் நீண்டகால வறுமை வன்முறை மோதல்களில் இருந்து உருவாகிறது.
ஏமன்: ஈரானின் நெருங்கிய நட்பு நாடான ஏமன், உலகின் ஒன்பதாவது ஏழ்மையான நாடாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $16.22 பில்லியன். சுமார் 34.4 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள இந்த மத்திய கிழக்கு நாடு, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
மடகாஸ்கர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியான தீவு நாடான மடகாஸ்கர், உலகின் 10வது ஏழ்மையான நாடாகும். 30.3 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $18.1 பில்லியன் ஆகும். 1960-ல் இறையாண்மை பெற்ற முன்னாள் பிரெஞ்சு காலனியான மடகாஸ்கரின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலா மற்றும் சுரங்கத்தை சார்ந்துள்ளது.