AI..பாலியல் பொம்மைகளில் சீன நிறுவனத்தின் புது கண்டுபிடிப்பு..
19 Feb,2025
ஏஐ தொழில்நுட்பத்துடன் வரும் பல பொருட்களை நாம் பார்த்து இருப்போம். ஆனால், இங்கே சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாலியல் பொம்மைகளிலும் கூட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது கிட்டதட்ட மனிதர்களுடன் இருக்கும் உணர்வைத் தரும் என்றும் இது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காலத்தில் நாம் எங்குத் திரும்பினாலும் ஏஐ தான்.. பிரிட்ஜ், வாஷிங் மேஷின்களில் கூட ஏஐ வந்துவிட்டது. இவை நமக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருப்பதால் ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஏஐ+ பாலியல் பொம்மைகள் இதற்கிடையே சீனாவில் நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத ஒரு விஷயத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளனர். அதாவது உலகெங்கும் இப்போது செக்ஸ் பொம்மைகளின் விற்பனை அதிகரித்து வரும் சூழலில், அதில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த டபள்யூ.எம். டால்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஏஐ செக்ஸ் பொம்மைகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்களுடன் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய செக்ஸ் பொம்மை மாடல்களின் விற்பனை சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.. ஏஐ பயன்பாடு என்பது ஒருவரது அனுபவத்தை மேம்படுத்துவதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லியு ஜியாங்சியா. கடந்த 2022ல் சாட் ஜிபிடி வெளியான நிலையில், அப்போது முதலே செக்ஸ் பொம்மைகளை இந்த ஏஐ உடன் வெளியிடத் தீவிர சோதனையை நடத்தினாராம்.
மனிதர்களைப் போலவே சுமார் ஓராண்டு சோதனைக்குப் பிறகு லியுவின் குழு பாலியல் பொம்மைகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருப்பதாகக் கூறுகிறார். வழக்கமான பாலியல் பொம்மைகளால் பேச முடியாது.. எதுவும் செய்ய முடியாது. ஆனால், இந்த ஏஐ பொம்மைகள் நீங்கள் பேசினால் பேசுமாம்.! 2, 3 நாட்களுக்கு முன்பு எங்கு விட்டீர்களோ.. அதே இடத்தில் இருந்து கூட உங்கள் உரையாடலைத் தொடரலாம்.
மேலும், ஏஐ மாடல் இருப்பதால் ஒவ்வொரு பாலியல் பொம்மைகளுக்கும் ஒவ்வொரு ஆளுமை அல்லது குணாதிசயங்கள் உடன் வருகிறதாம். இதன் காரணமாக கிட்டதட்ட ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற உணர்வையே இந்த பாலியல் பொம்மைகள் தருகிறதாம். இந்த வகையான ஏஐ உடன் வரும் பாலியல் பொம்மைகளின் விலை அதிகம் என்றாலும் கூட இதை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக லியு கூறுகிறார். தனியுரிமை சிக்கல் இல்லை உரையாடல் என்றால் நாம் பல தகவல்களைச் சொல்வோம். அந்த டேட்டா எல்லாம் சீனாவுக்கு போகுமா.. அப்போ தனியுரிமை என்ன ஆகும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இதற்கும் லியு பதிலைத் தருகிறார். அதாவது எல்லா தரவுகளும் உள்நாட்டில் (அதாவது எந்த நாட்டில் பாலியல் பொம்மைகள் பயன்படுத்தப்படுகிறதோ அதே நாட்டில்) தான் டேட்டாவை சேகரித்து வைக்கிறோம்.. எங்களால் கூட அதை அணுக முடியாது" என்கிறார்.
அமெரிக்காவின் ரோபோ கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ரியல்போடிக்ஸ் என்ற நிறுவனம் ஆரியா (Aria) என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியது. இது அப்படியே கிட்டதட்ட பெண்களைப் போலச் செயல்படும். இந்த காலத்தில் தனிமை என்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதை சமாளிக்க இந்த ரோபோ பயன்படும் என்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ. அவர் மேலும் கூறுகையில், "இது ஒருவருக்கு நண்பராகவும் இருக்கும் காதலியாகவும் இருக்கும். உங்கள் தனிமை பிரச்சனை முடிவுக்கு வரும்" என்கிறார்.
ஆரியா ரோபோ பார்க்க கிட்டதட்ட பெண்ணை போலத் தான் இருக்கிறது. அதன் முக பாவனைகள் கூட தத்ரூபமாக இருப்பதாக இணையத்தில் அவை டிரெண்டானது. ஆனால், இந்த விலை தான் ரொம்பவே அதிகம். அதாவது இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாய்க்கு ($175,000) ரோபோ விற்பனையாக உள்ளது. விலை அதிகம் என்றாலும் வரும் காலங்களில் தனிமையைச் சமாளிக்க இதுபோன்ற ரோபோக்களின் வருகை அதிகரிக்கவே செய்யும் எனக் கூறப்படுகிறது.