ஆண்களே தனியா வராதீங்க.. ஜப்பான் உயிரியல் பூங்கா ஸ்ட்ரிக்ட் உத்தரவு!
16 Feb,2025
ஜப்பான் நாட்டில் உள்ள ஹீலிங் பெவிலியன் என்ற உயிரியல் பூங்கா திடீரென தனியாக வரும் ஆண்களுக்கு மொத்தமாக தடை விதித்துள்ளது. உலகில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானில் ஏன் இதுபோன்ற தடை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் கருதப்படுகிறது. என்ன தான் ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை வெறும் 12 கோடியாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது.
இந்து முறைப்படி எளிமையாக நடந்த நடிகை வனிதாவின் திருமணம்.. வதந்திகளுக்கு மத்தியில் இப்படி ஒரு முடிவா? ஜப்பான் சிக்கல் வளர்ந்த நாடாக இருந்தாலும் ஜப்பானில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக பொது இடங்களில் பெண்கள் மீது அடிக்கடி பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஜப்பானின் இருண்ட பக்கங்களில் ஒன்றாக இந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த பாலியல் அத்துமீறல்கள் காரணமாகவே ஜப்பான் பூங்கா மொத்தமாக ஆண்களுக்குத் தடை விதித்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹீலிங் பெவிலியன் என்ற பூங்காவில் தான் ஆண்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி கூட நடக்குமா என நாம் யோசிப்போம். ஆனால், உண்மையில் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கும் பெண் விருந்தினர்களுக்கும் ஆண் பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருகிறார்களாம். இதை தடுக்க எடுத்த நடவடிக்கையும் பெரியளவில் கை கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனியாக வரும் ஆண்களுக்கு மொத்தமாகத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. Powered By ஆண்களுக்குத் தடை டோச்சிகி ப்ரிஃபெக்சர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா தனித்துவமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த பூங்காவில் மக்கள் பல்வேறு விலங்குகளை எடுத்துக் கொஞ்சி மகிழலாம்.. மேலும், விலங்குகளுக்கு உணவளிக்கவும் கொஞ்சி விளையாடவும் முடியும். இதனால் உள்ளூரில் மிகவும் பிரபலமான உயிரியல் பூங்காவாக இது இருந்தது. ஆனால், ஆண்களின் அத்துமீறல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததால் தடை விதித்துக் கடந்த ஜனவரி 26ம் தேதி அறிவிப்பு வெளியானது.
அது குறித்த அறிவிப்பில், "இன்று முதல், நாங்கள் தனியாக வரும் ஆண்களை அனுமதிக்க மாட்டோம். இது ஆணவத்தால் அல்லது தவறான புரிதலால் அல்ல. இங்கு வரும் ஆண்களில் பலருக்குத் தவறான நோக்கங்கள் உள்ளன. இது ஒன்றும் கிளப் இல்லை. நீங்கள் உண்மையிலேயே விலங்குகளைக் கொஞ்சி மகிழ வேண்டும் என்றால் தயவு செய்து நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வாருங்கள்" என்று கூறப்பட்டு இருந்தது. என்ன காரணம் மேலும், உயிரியல் பூங்கா நுழைவாயில் பகுதியிலும் இது குறித்த அறிவிப்பை வைத்துள்ளனர்.
அதில் தனியாக வரும் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றும் குடும்பம் அல்லது நண்பர்கள் உடன் வர வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உயிரியல் பூங்கா இயக்குநர் மிசா மாமா கூறுகையில், "இங்குத் தனியாக வரும் ஆண்கள் பெண் ஊழியர்கள், பார்வையாளர்களுக்குத் தொல்லை தருகிறார்கள். அவர்கள் செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இங்கு அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதால் இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. Advertisement என்ன தான் பூங்கா தரப்பில் இவ்வளவு விளக்கம் தரப்பட்டாலும், நெட்டிசன்கள் சிலர் இது ஆண்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஆண்கள் மீதான பாலின பாகுபாடு என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.