பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் பெறப் போகும் நற்பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மேஷம் (Mesham) -
மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், தெய்வீக காரியங்களுக்காக தங்களுடைய வீட்டில் இருந்து கடல் கடந்த பயணங்கள், உள்ளூர் பயணங்கள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பண வரவு அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மனதில் சந்தோஷமும் ஏற்றமும் ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும்
மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், தெய்வீக காரியங்களுக்காக தங்களுடைய வீட்டில் இருந்து கடல் கடந்த பயணங்கள், உள்ளூர் பயணங்கள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பண வரவு அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மனதில் சந்தோஷமும் ஏற்றமும் ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும்
புதிய முதலீடுகள் எதிர்பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக முதலீடு கிடைக்கும். செல்வாக்குகள் கூட கூடிய நல்ல வாரமாக இருக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எடுத்த காரியத்தில் ஜெயம் அனுகூலம் காணப்படும். அனைத்து விஷயங்களிலும் அமைதியாக மாறுவீர்கள். அனைத்து வேலைகளையும் படிப்படியாக செய்து முடிப்பீர்கள். ஆத்ம திருப்தி ஏற்படுத்தும். குடும்பத்தை அதிக அளவில் நேசிப்பீர்கள். சரியான நேரத்தில் தூங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். படிப்படியாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.
மேஷத்திற்கு புதிய புத்துணர்வு பிறக்கும். அற்புதமான அமைப்பாக இருக்கும். திட்டமிட்டு அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெருமாள், விஷ்ணுவை வழிபடுவது நல்லது
ரிஷபம் (Rishabam) - ரிஷப ராசிக்காரர்கள் வயிறு, கழிவுகள் போகும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். அனுகூலமான நேரமாக இருக்கும். கலைத் துறை, மீடியா துறை, விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நேரமாக இருக்கும். தொழில் ரீதியான ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
தொழில், உத்தியோகம், வேலை, வியாபாரம், படிப்பு, துணைவியார் விஷயங்களில் ஆக்கப்பூர்வமான அமைப்பு ஏற்படும். வண்டி வாகன மாற்றங்கள் அனுகூலமாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும். கடன்களை கட்டி முடிப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்க கடன் வாங்குவீர்கள். அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். நல்ல பதவியைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பிள்ளைகள், மனைவி உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மகான்கள் வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் மாசி மாதத்தில் பசுக்களுக்கு உணவளிப்பது நல்லது. தடைகள் தவிடு பொடியாகும். பெரியவர்களின் உடல் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளால் வேலையில் குழப்பம் ஏற்படும். அண்டை வீட்டாரின் உறவு, பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகம், ஆன்லைன் மூலமாக பிரச்சனை, ஆபாச விஷயங்களால் பிரச்சனைகள் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தாய் தந்தை வழி உறவு மேன்மை அடையும். மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாகத் தீரும். அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எதிர்பாராத நல்ல விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தேவையில்லாத பிரச்சனைகள் வரும். வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.