மேஷ ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம், அதை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகப்படியான வேலை காரணமாக நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உணர்வீர்கள். நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்க நபரின் உதவி, உங்களுக்கு நிவாரணமாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை, இல்லையெனில் தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பிங்க் அதிர்ஷ்ட எண்: 13
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பேச்சிலும், நடத்தையிலும் அதிக கட்டுப்பாடு தேவை. வேலையில் கடின உழைப்பு மூலம் விரும்பிய பலனைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் மற்றும் விரும்பிய பலனைத் தரும். இருப்பினும், வேலையுடன் உங்கள் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும், இல்லையெனில் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். சொத்து தொடர்பான தகராறுகளைத் தீர்க்கும் போது உங்கள் நலன் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்:
மிதுனம்
உங்கள் இலக்கை நோக்கி சரியான முயற்சிகளை மேற்கொண்டால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும், மற்றவர்களை விட உங்களை உயர்ந்தவர் என்று கூறும் பழக்கத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, அலங்காரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எண்: 5
கடகம்
எந்த ஒரு வேலையையும் யோசித்து செய்ய வேண்டும், இல்லையெனில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். உங்கள் வேலையைக் கெடுக்க முயற்சிக்கும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில், நீங்கள் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பயணங்கள் ஆனது எதிர்பார்த்ததை விட குறைவான பலனைத் தரும். பணிபுரியும் பெண்கள் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் துணையுடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 11
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். வேலையில் பெரிய பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்பு உள்ளது. பங்குகள் அல்லது வேறு எங்கும் முதலீடு செய்யும்போது, உங்கள் நலன் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரைப் பற்றிய நல்ல செய்திகளைப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: பர்பிள் அதிர்ஷ்ட எண்: 3
கன்னி
வீடு, குடும்பம் தொடர்பான சிறு பிரச்சனைகளைத் தவிர்த்தால் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நலன் விரும்பிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தை மூலம் பலரது மனதை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீங்கள் எந்த வேலை அல்லது ஒப்பந்தம் செய்தாலும், ரிஸ்க் எடுப்பீர்கள், பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் அதிர்ஷ்ட எண்: 1
துலாம்
வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தவறு செய்வதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் எந்த ஒரு பெரிய தவறும் நடக்காமல் இருக்க, உங்கள் வேலையை வேறொருவரின் கைகளில் விடுவதைத் தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை, இல்லையெனில், உங்கள் முதலாளியின் கோபத்தை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்ய கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பெண்களின் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 4
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது, தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும், இதனால் உடல் மற்றும் மன சோர்வை ஏற்படுத்தும். தொழில் பிரச்சனைகளால் மன உளைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள், சந்தையில் தங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: கிரீம் அதிர்ஷ்ட எண்: 7
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவலைகள் நிறைந்த வாரமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைகள் மற்றும் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான பயணம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்க நேரிடலாம், அவருடைய உதவியுடன் உங்கள் வியாபாரம் முன்னேறும். நீண்ட நாட்களாக உங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். குடும்பத்தின் தேவைகள் மற்றும் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சற்று நிம்மதி கிடைக்கும் வாரமாக இருக்கும். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் சில நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் வருமானத்தை விட அதிக செலவுகள் காரணமாக நிதிக் கட்டுப்பாடுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் அதிக வேலை காரணமாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியருடன் அல்லது குடும்பத்தில் உள்ள உறவினருடன் விரிசல் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை குறித்து கவலைப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 15
கும்பம்
உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க, இந்த வாரம் உங்களுக்கு ஆற்றலையும், நம்பிக்கையையும் தரும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தை மூலம் உங்கள் வேலையைச் செய்து முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக வெளிநாட்டில் வியாபாரத்திற்காக முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்கள் முயற்சிகளில் சாதகமான முடிவுகளைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்கள் வாங்குவதில் இருந்த சிரமங்கள் நீங்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பர்பிள் அதிர்ஷ்ட எண்: 2
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம், நேரம் இரண்டையும் சரியாக நிர்வகித்து முன்னேற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் வரும் எல்லாவிதமான சவால்களையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியம், உங்கள் கவலைக்கு ஒரு பெரிய காரணமாக மாறும். நீங்கள் ஒரு வேலையைத் தேடுகிறீர்களானால், அதற்காக நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நிதி ரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவீர்கள். வாகனத்தைக் கவனமாக ஓட்ட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 8
FIRST PUBLISHED : February 1, 2025, 12:57 AM IST