சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை - பின்னணியில் வேறு நாடு என சந்தேகம்
01 Feb,2025
சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின் பிரதமர் உல்வ் கிரிஸ்டேர்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கொலையை கண்டித்துள்ள சுவீடனின் பிரதிபிரதமர் எபாபுஸ் இது எங்களின் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்இ எங்கள் சமூகம் இதனை முழுமையாக எதிர்க்கவேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர் எனினும் நாங்கள் இந்த சம்பவம் சுவீடனின் பாதுகாப்பிற்கு எவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பார்ப்பதற்காக நிலைமைய உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகள் அமைப்புகள் தனிநபர்களிற்கு எதிரான வன்முறைகளிற்காக ஈரான் அரசாங்கம் சுவீடனிற்குள் ஆயுத குழுக்களை பயன்படுத்துகின்றது என கடந்த வருடம் சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை எச்சரித்திருந்தது.
மொமிகா டிக்டொக்கில் நேரலையில் ஈடுபட்டிருந்தவேளையே சுடப்பட்டார் என சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மொமிகா இஸ்லாமிய மதத்தி;ற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்இ
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன.