திடீரென நகர்ந்த வடதுருவம்.. கூகுள் மேப் கூட குழம்பிடும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
24 Jan,2025
இப்போது நாம் செல்போன்களில் ரூட் பார்த்துச் செல்ல கூகுள் மேப்பை தான் பிரதானமாக நம்பி இருக்கிறோம். வடதுருவம் எங்கே இருக்கிறது என்பதை வைத்தே இந்த ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்கிடையே இப்போது காந்தப்புல வடதுருவம் இடமாறியுள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வடதுருவம் இடமாறுவது ஏன்.. இது இப்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். நாம் பொதுவாகக் கூகுள் மேப்பை ஓபன் செய்து பார்த்தோம் என்றால் அதில் ஒரு மூலையில் வடதுருவத்தைக் காட்டும் காம்பஸ் இருக்கும். பெரும்பாலும் அதை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஆனால், அது நமக்குப் பல விதங்களில் நமக்கு உதவுகிறது.
வடதுருவம் அதாவது கார், பைக்கில் செல்லும்போது ரூட் பார்த்துச் செல்ல சாலையோரங்களில் உள்ள பலகைகள் பயன்படும். ஆனால், விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் போகும்போது அதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற சூழல்களில் தான் நமக்கு நேவிகேஷன் சிஸ்டம் பெரியளவில் கை கொடுக்கும். இந்த நேவிகேஷன் சிஸ்டம் சரியாகச் செயல்படப் பூமியின் வட துருவம் (magnetic North Pole) ரொம்பவே முக்கியமானது. அந்த வட துருவம் தான் இப்போது இடமாறியுள்ளது. பொதுவாக இது தொடர்பான தகவல்களை உலக மெக்னடிக் மாடல் என்ற அமைப்பு தான் வழங்கும். அதன்படி இந்த அமைப்பு வழங்கிய டேட்டாவில் வட துருவம் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் ராணுவ மற்றும் சிவிலியன் விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த தரவை வைத்துத் தான் இயங்கும்.
l
காந்த வடதுருவம் என்றால் என்ன: காந்த வட துருவம் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள புள்ளியாகும். சரியாக அந்த இடத்தில் தான் கிரகத்தின் காந்தப்புலம் செங்குத்தாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. புவியியல் வட துருவத்திற்கும் காந்த வட துருவத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. புவியியல் ரீதியாக நாம் குறிப்பிடும் வட துருவம் எப்போதும் ஒரே இடத்தில் நிலையாக மாறாமல் இருக்கும். ஆனால், காந்த வட துருவம் அப்படி இல்லை.. பூமி கோர் மாறுவதால் காந்த வட துருவம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். கூகுள் கூட குழம்பிவிடும்:
நாம் செல்போன்களில் பயன்படும் ஜிபிஎஸ் உள்ளிட்டவை சரியாக வேலை செய்ய இந்த காந்த வட துருவம் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வடதுருவம் எங்கே உள்ளது என்பதைச் சரியாக அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் மேப் தொடங்கி எல்லா நேவிகேஷன் சிஸ்டமும் குழம்பிவிடும். நகர்வது ஏன் முன்பே குறிப்பிட்டது போலக் காந்த வட துருவம் என்பது பூமியின் கோருக்கு வெளியே உள்ள இரும்பு மற்றும் நிக்கல் உள்ளிட்ட உலோகங்களால் ஆன திரவத்தைச் சார்ந்தே இருக்கும்.. அந்த திரவம் சுற்றிக் கொண்டே இருக்கும். இதனால் ஜியோடைனமோ ஏற்படும் நிலையில், இதுவே பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகின்றன. சர் ஜேம்ஸ் கிளார்க் ரோஸ் 1831ஆம் ஆண்டு வடக்கு கனடாவில் வட காந்த துருவத்தை முதன்முதலில் கண்டுபிடித்தார். 1831ஆம் ஆண்டு முதலே காந்த புலனின் வட துருவமானது கனட ஆர்க்டிக் வழியாக ரஷ்யாவை நோக்கி நகர்கிறது. அதுவும் சமீப காலமாக அது படுவேகமாகே நகர்ந்து வருகிறது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது.. அதேநேரம் 2000ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 55 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இப்போது எங்கே இருக்கிறது: இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,
"1500ம் ஆண்டு முதல் கனடாவைச் சுற்றி காந்தப்புல வட துருவம் மெதுவாக நகர்ந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அது சைபீரியாவை நோக்கி அது வேகமாகச் சென்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வேகமாக நகர்ந்து வந்த வடதுருவம் அதன் பிறகு மெதுவாக நகரத் தொடங்கியது. அதன் வேகம் ஆண்டுக்கு 50 கிமீ வேகத்தில் இருந்து 35 கிலோமீட்டராக குறைந்துவிட்டது. இதுபோல ஒரு மாற்றம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை" என்றனர். மேலும், இப்போது அது ஆர்க்டிக் பெருங்கடலுக்கு அருகில் நிலை கொண்டு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்