கார் ஏற்றி 35 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
21 Jan,2025
சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனைவியுடனான விவகாரத்திற்கு பின் சொத்துக்கள் பிரிப்பது குறித்து ஆத்திரமடைந்த பான் வெய்க்யூ(62) என்பவர் விளையாட்டு மைதானத்துக்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 35 பேர் உயிரிழந்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழிற்கல்வி பள்ளியில் கடந்த ஆண்டு கத்தியால் குத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். சூ ஜியாஜினுக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.