..
கோயில் வசந்தமண்டபத்திலேயே இளம்பெண்ணுக்கு நடந்த சம்பவம் மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. தலைநகரம் சென்னையிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது, பக்தர்களுக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. சென்னை கந்தகோட்டம் முருகன் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும்... பாரிமுனை பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மிகவும் பழமையானது என்று கூறப்படுகிறது.
" பழமையான கோயில்: மூலவர் கந்தசுவாமி, உற்சவர் முத்துக்குமாரர். அம்மன் வள்ளி, தெய்வானை. தலவிருட்சம் மகிழம், தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே மூலவர், உற்சவர், அம்மன் சன்னதிகள் உள்ளன. மேலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, சித்திபுத்தி விநாயகர், சரவணப் பொய்கை, பஞ்சபூத தீர்த்தம், சப்தகன்னிகள் சன்னதிகள் உள்ளன.. இந்நிலையில், இந்த நகரில் கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலில், இருமுடி கட்டுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 40 ஐயப்ப பக்தர்கள் வந்திருக்கிறார்கள்.. ஆனால், இருமுடி கட்டி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. இதனால், அவர்களது உறவினர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல், அங்குள்ள வசந்த மண்டபத்திலேயே இரவு தங்கியிருக்கிறார்கள்..
இதில், 34 வயது பெண்ணும், அங்கேயே படுத்து தூங்கியிருக்கிறார். Powered By செக்யூரிட்டி: அப்போது, வசந்த மண்டபத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர், தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் நெருங்கி, தவறாக நடக்க முயன்றுள்ளதாக தெரிகிறது.. இதனால் சுதாரித்து கண்விழித்த பெண், அலறி கூச்சலிட்டுள்ளார்.. இதனால் அந்த செக்யூரிட்டி பயந்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அந்த பெண், கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டார்.. இதையடுத்து, வசந்தமண்பம் தரப்பில் பூக்கடை போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வசந்த மண்டபம்: அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண், தன்னுடைய அப்பா சபரிமலைக்கு செல்வதால், இருமுடி கட்டுவதற்காக இந்த கோயிலுக்கு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமானதால், இனிமேல் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், கோயில் மண்டபத்தில் படுத்து தூங்கியிருக்கிறார்..
அப்போதுதான் செக்யூரிட்டி இவரிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட செக்யூரிட்டி பூங்கா நகர் தங்கசாலை தெருவை சேர்ந்தவராம்.. 45 வயதாகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சபரிமலை செல்வதற்காக, இருமுடி கட்ட வந்த தந்தையை வழியனுப்ப வந்த பெண்ணுக்கு, கோயிலில் வசந்த மண்டபத்திலேயே பாலியல் தொல்லை தரப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.