விவாகரத்து செய்யும் தம்பதிகளை ஆறு மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதிலும் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் பெண்கள் நீண்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள், விவாகரத்து தொடர்பான செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் விவாகரத்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளும் கவனம் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளனர். சமீபத்தில் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இப்படி வரிசையாக விவாகரத்துகள்.. பிரபலங்கள் இடையிலும்.. பிரபலங்கள் இல்லாதவர்கள் இடையிலும் கவனம் பெற்று வருகின்றன.
வடகொரியா சட்டம்:
இப்படிப்பட்ட நிலையில்தான் விவாகரத்து செய்யும் தம்பதிகளை ஆறு மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதிலும் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் பெண்கள் நீண்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
வடகொரியா ஏற்கனவே கடுமையான சட்டங்களை.. மோசமான விதிமுறைகளை.. அதை மீறுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்கி வரும் நாடு. அதில் புதிதாக விவாகரத்து சட்டம் ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது.
அதன்படி திருமண உறவை முடித்துக்கொள்வது என்பது குடும்ப முறைக்கு எதிரானது.. சோசலிச முறைகளுக்கு எதிரானது. இதற்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே விவாகரத்துகள் குறையும். இதற்கு முன்னதாகவே வடகொரியாவில் விவாகரத்து வழக்குகள் கடுமையாகவே இருந்தன.
இப்போது வந்துள்ள சட்டம் ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மாறி உள்ளது. இதற்கு முன்னர் தம்பதிகளில் விவாகரத்து கோரும் தரப்பினரை மட்டுமே தண்டிக்கும் வகையில் சட்டம் இருந்தது. ஒரு மனைவி.. உடல் ரீதியான துன்புறுத்தப்படுவதாக கூறி விவாகரத்து கேட்டால் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இனி கணவன் - மனைவி இருவருக்கும் விவாகரத்து வழக்கில் தண்டனை வழங்கப்படும்.
விவாகரத்து செய்யும் தம்பதிகளை ஆறு மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டு இருக்கிறாராம். அங்கே கடுமையான வேலைகளை, போதுமான உணவு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளாராம்.
கொரோனாவிற்கு பின் அங்கே விவாகரத்துகள் அதிகம் நடக்கின்றன. இதை கிம் ஜோங் அரசு விரும்பவில்லை. இதை தடுக்கவே கிம் ஜோங் அரசு இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.