பிரிட்டனை தாக்கப் போகும் கடும் குளிர்- தயாராக இருக்குமாறு எச்சரிக்கை
09 Jan,2025
அடுத்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளில், கால நிலை மாறவுள்ளதாக மெற்றோ பொலிடன் மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடும் குளிரில் பிரிட்டன் இருக்கும் நிலையில். மேலும் கடுமையான குளிர் பரவ உள்ளது. இதனால் பிரித்தானியாவின் சில பகுதிகள் - 15 வரை செல்லும் என்றும். வாகனங்கள் உறை நிலைக்குச் சென்று, அதனை ஸ்டாட் செய்வதில் பெரும் சிரமம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க வீதிகள் பிளாக் ஐஸ் எனப்படும், பழிங்கு போல மாறுவதால் கார் டயர் வழுக்கும் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பிரித்தானிய அரசிடம் வீதியில் போடும் உப்புக் கல் இல்லை. இதற்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. முழு ஐரோப்பாவும், உப்புக் கல்லை இறக்குமதி செய்வதால், தயாரிப்பாளர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் முக்கிய வீதிகளுக்கு மட்டுமே உப்புக் கல்லை, போடுகிறது லோக்கல் கவுன்சில்.