கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
07 Jan,2025
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக உள்ளார். அந்த நாட்டில் வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு உள்ளது.
இந்த வாரத்தில் ராஜினாமா செய்ய திட்டம்?" ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவில் தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை ஜஸ்டின் ட்ரூடோ கையாண்ட விதம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்தியாவுக்கு எதிராக உறுதியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் இந்தியாவை இந்த விவகாரத்தில் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால், அவரது சொந்த கட்சியில் கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
ஜக்மீத் சிங்கும் எதிர்ப்பு மற்றொரு பக்கம் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்பும் ஜஸ்டின் ட்ரூடோவை சீண்டும் வகையில் பேசி வருகிறார். கனடாவை அமெரிக்கவின் 51-வது மகாணமாக இணைக்க வேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாகவும் கூட டிரம்ப் கூறினார். சர்வதேச நாடுகளுடனான உறவு ஒருபக்கம் என்றால் அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், ட்ருடோவிற்கு எதிராக கிளம்பினார். ட்ரூடோ அரசு மீது வரும் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். இதனால் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். லிபரல் பார்ட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ துறந்துள்ளார். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்கலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் பிரதமராக ஆட்சியில் இருந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெறவில்லை. எனினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.