வாழ்க்கையில் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையான பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். சில நேரங்களில் நம்முடைய ராசியில் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிட்ட சில பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழலம் ஏற்படும். அந்த வகையில், 2025 புத்தாண்டில் பிரச்னைகளைச் சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
விருச்சிகம்:
மனதளவில் வலிமையானவர்களாகவும், உறுதியாகவும் காணப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரையிலான காலகட்டங்களில் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. சில சமயங்களில் உங்களையும் மீறி கோபப்படுவதற்கான சூழல் உருவாகும். இதனால், சிலருடன் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், உங்களுடைய இலக்குகள் மற்றும் உணர்ச்சிகளை கவனத்தில் கொண்டு சமநிலையுடன் இருப்பது நல்ல பலன்களைத் தரும்
மேஷம்:
மிகவும் தைரியமாக இருக்க கூடியவர்கள் மேஷ ராசிக்காரர்கள். மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரையிலான காலகட்டங்களில் சில பிரச்னைகள் ஏற்படும். உங்களுடைய மன தைரியமே சில நேரங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். மற்றவர்களைப் பொருத்தவரை திமிர் பிடித்தவர்கள் போல உங்களுடைய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்கள் மன தைரியத்தை கவனமாகவும், சமநிலையுடன் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது அவசியம்.
கடகம்:
உணர்ச்சி, அனுதாபம், உள்ளுணர்வு அதிகம் உள்ளவர்கள் கடக ராசிக்காரர்கள். உங்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டங்களில் சில பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய உணர்ச்சிவசப்படும் இயல்பாலேயே சில நேரங்களில் உங்களுக்கு காயங்கள் உண்டாகும். மனநிலை மாற்றம் மற்றும் பதட்டம் ஆகியவற்றுடன் போராடும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது.
மிதுனம்:
அறிவுக்கூர்மை, வசீகரிக்கும் தன்மை உடையவர்களான மிதுன ராசிக்காரர்களுக்கு மே 21 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு பாராட்டும் இயல்புடையவர்களாக இருப்பீர்கள். அர்ப்பணிப்பு, கவனம், திசைதிருப்பும் போக்கால் போராடும் சூழல் ஏற்படும். மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்திற்கும், வசீகரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்களை உருவாக்க முடியும். அவர்கள் அர்ப்பணிப்பு, கவனம் மற்றும் எளிதில் திசைதிருப்பும் போக்கு ஆகியவற்றுடன் போராடலாம். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஆர்வத்துடன் செய்யும் நீங்கள் இதனால் சில ஆபத்தான விஷயங்களில் சிக்கும் சூழல் உருவாகும்.
சிம்மம்:
தன்னம்பிக்கை, தலைமைப் பண்புக்கு பெயர் பெற்றவர்களாகவும், வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தைரியமாகவும், மன வலிமையுடனும், நம்பிக்கையுடனும் எடுத்த காரியங்களைச் செய்வீர்கள். உங்களுக்கு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை சில பிரச்னைகளைச் சந்திப்பதற்கா சூழல் உண்டாகும். உங்களுடைய பெருந்தன்மை மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததால் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களே இந்த கற்பனையாலேயே சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாவீர்கள். யதார்த்தமான சூழலைப் புரிந்து கொள்ள போராடும் போக்கு உருவாகும். உங்களுடைய இயல்பே உங்களை பலவீனமாக்கும். உங்ளுக்கு பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டம் பிரச்னைகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், மீன ராசிக்காரர்கள் தங்கள் கற்பனையை பகுத்தறிவு மற்றும் நடைமுறையுடன் ஒப்பிட்டு அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.