2024ல் பாபா வாங்காவின் கணிப்புகளில் எவை எல்லாம் நடந்தது!
29 Dec,2024
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து துல்லியமான கணிப்புகளை விட்டுச் சென்றவர்களில் முக்கியமானவர் பாபா வாங்கா.. நடப்பு 2024ம் ஆண்டு குறித்து அவர் சில கணிப்புகளைச் செய்திருந்த நிலையில், அதில் எவை துல்லியமாக அப்படியே நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம். வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வது நம் அனைவருக்கும் பிடிக்கும். சிலர் வரும் காலம் குறித்து துல்லியமான கணிப்புகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பாபா வாங்கா.. பாபா வாங்கா:
வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்பதே இவரது இயற்பெயர். சிறுவயதிலேயே மின்னல் தாக்கியதால் கண் பார்வையை இவர் இழந்தார். ஆனால், இந்தச் சம்பவத்தில் தான் எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றலை அவர் பெற்றதாக அவரது பாலோயர்ஸ்கள் கூறுகிறார்கள். அவர் 1996ம் ஆண்டில் உயிரிழந்த நிலையில்,
அதற்கு முன்பே வரும் காலங்கள் குறித்துப் பல கணிப்புகளை விட்டுச் சென்றார். குறிப்பாக இரட்டைக் கோபுர தாக்குதல், டயானா மரணம் எனப் பல நிகழ்வுகளை இவர் முன்கூட்டியே சரியாகக் கணித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டிற்கும் இதுபோல அவர் சில கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். அதன்படி 2024ம் ஆண்டிற்கும் அவர் சில கணிப்புகளைச் செய்திருந்த நிலையில், அதில் எவை எல்லாம் துல்லியமாக நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புவிசார் அரசியல்: இந்த ஆண்டு புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நாடுகளின் கடன் உயரும் என்றும் அவர் கணித்திருந்தார். இதனால் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். இது அப்படியே நடந்துள்ளது என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்த ஆண்டில் உலகம் மிகப் பெரிய இரு போர்கள் அரங்கேறியுள்ளது. ஒரு பக்கம் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.. இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
அதேபோல உக்ரைன் ரஷ்யா போரும் இந்தாண்டு தீவிரமடைந்தது. இப்படி இரு போர்களை நமது உலகம் கண்டது. அதேபோல அமெரிக்காவில் பணவீக்கம் புதிய உச்சம் தொட்டது. வட்டி உயர்வு காரணமாக அங்குப் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் கூட சில நாடுகளின் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த கணிப்பு அப்படியே நடந்துள்ளது என சொல்லலாம். காலநிலை மாற்றம்: அதேபோல பாபா வாங்காவின் மற்றொரு முக்கிய கணிப்பு பருவநிலை தொடர்பானது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தாண்டு மோசமான வானிலை நிலவும் என்று பாபா வாங்கா கணித்து இருந்தார். அவர் கணித்தது போலவே இந்தாண்டு தான் உலகின் மிகவும் வெப்பமான ஆண்டு என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்தாண்டு உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த ஆண்டில் சுற்றுச்சூழல் மோசமடையும் என்றும் காலநிலை நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்திருந்த நிலையில், அதுவும் அப்படியே நடந்துள்ளது. மருத்துவம்: பாபா வாங்காவின் மருத்துவம் தொடர்பாக முக்கிய கணிப்பைச் செய்திருந்தார். மருத்துவத் துறையில் தீர்க்க முடியாத நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருந்தார்.
அவரது கணிப்பைப் போலவே இந்தாண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மருந்தைக் கண்டுபிடிப்பதில் முக்கியமான திருப்பம் அரங்கேறியது. அதாவது நிலையான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சைக்கு முன் ஒரு முறை கீமோதெரபி சிகிச்சை அளித்தால் உயிரிழப்பு அபாயம் 40% வரை குறைவது தெரியவந்துள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்படி உலகின் நடந்த மிக முக்கியமான 3 விஷயங்களைப் பாபா வாங்கா துல்லியமாகவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.