ரஷ்ய வான்வெளியில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்திற்குள்ளான சோகமான சம்பவத்திற்காக, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார். உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பல நகரங்களைத் தாக்குவதாகக் கூறப்பட்ட தெற்கு ரஷ்யாவிலிருந்து திசைமாறி கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரை நோக்கி சென்ற போது விபத்து ஏற்பட்டது. குரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான
'எம்ப்ரேயர் 190' ரக பயணிகள் விமானம் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷியாவிற்கு சென்று கடந்த டிசம்பர் 25ம் தேதி (புதன்கிழமை அன்று ) கொண்டிருந்தது. இந்த சூழலில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பல நகரங்களைத் தாக்குவதாகக் கூறப்பட்ட தெற்கு ரஷ்யாவிற்கு அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதாக சொல்லப்படுகிறது.
" ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் போதும்.. இந்த நாட்டிற்கு போனால் லட்சாதிபதிதான்.. உண்மையில் தாங்க" இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக காஸ்பியன் கடலை கடந்து கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி அங்குள்ள விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. . அதன்படி அக்தாவ் நகர விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான அனுமதியை அக்தாவ்வ அதிகாரிகள் தந்தார்கள். ஆனால் அக்தாவ் நகர விமான நிலையத்தை அடைவதற்கு முன்பாக விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமானம் வானிலேயே போராடிய நிலையில்,
அக்தாவ் நகர விமான நிலையத்தின் அருகே 3 கி.மீ தொலைவுக்கு முன்னதாக உள்ள திறந்தவெளி பகுதியில் விமானத்தை விமானிகள் அவசரமாக தரையிறக்கினார்கள். அப்போது விமானம் திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 38 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ரஷ்யா நடத்திய ஏவுகணைச் சோதனைதான் விபத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்த ரஷ்யா, விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது பொதுமக்களின் கட்டமைப்புகளை குறிவைத்து குரோன்ஸி மற்றும் விளாடிகவ்காஸ் நகரங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது இதுதான் பிரச்சனைக்கு காரணம் என ரஷ்யா விளக்கம் அளித்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன்,
சேதமடைந்த ஜெட் விமானத்தை காஸ்பியன் கடலைக் கடக்க கட்டாயப்படுத்தியது ரஷ்யா தான். பெரும்பாலும் அவர்களின் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க ரஷ்யா மீது குற்றம் சாட்டுகிறது என்று உக்ரைன் தெரிவித்தது. Recommended For You "கவனம்! விமான பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு.. புது ரூல்ஸ் என்ன " இதனிடையே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,
முதற்கட்ட விசாரணையின் தகவலின்படி தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு (physical) ஆகிவற்றால் விமானம் விபத்தில் சிக்கியது என நேற்று கூறியது. இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்திற்குள்ளான சோகமான சம்பவத்திற்காக, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக ரஷ்யா அரசு வெளியிட்ட அதிபர், " அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரஷ்யா வெளியிட்டிருந்த அந்த அறிவிப்பில், "அஜர்பைஜான் பயணிகள் விமானம், திட்டமிட்டப்படி பயணித்தது, மீண்டும் க்ரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது, க்ரோஸ்னி, மோஸ்டோக் மற்றும் விளாடிகாவ் நகரங்கள் உக்ரைனின் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது ரஷ்ய விமான பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்தன. அப்போது நடந்த சிக்கலே இந்த விபத்திற்கு காரணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.